News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News March 11, 2026
திருநெல்வேலி: மழை நேரங்களில் whatsapp-ல் உதவி!

திருநெல்வேலி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தேர்தல் குறித்து போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
News March 11, 2026
திருநெல்வேலி: அரசின் கோர முகத்தை வெளிப்படுத்தியது – MLA

நெல்லை எம் எல் ஏ நைனார் நாகேந்திரன் செய்தி குறிப்பில், மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு இது. கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.


