Tamilnadu

News May 3, 2024

திண்டுக்கல்: மாணவிகளுக்கு தேனீ வளர்ப்புப்‌ பயிற்சி

image

தோப்புப்பட்டியில் உள்ள தேனீ வளர்ப்புப் பண்ணையில் செம்பட்டி ஆர்.வி.எஸ் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் அயல் மகரந்த சேர்க்கை, தேனை பிரித்தெடுத்தல், நோய் நிர்வாகம் பற்றியும் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் வரும் பாதிப்புக்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

News May 3, 2024

புதுச்சேரி: முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு

image

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.8000 மழைக்கால நிவாரண உதவியாக ரூ.6000 என ஒவ்வொரு மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் புதுவையில் தமிழகத்தை விட குறைந்த மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் போல் இங்கும் மானிய உதவி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்தார்.

News May 3, 2024

காங்கேயத்தில் புத்தகத் திருவிழா

image

காங்கேயம் நகரத்தில் நகர ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

News May 3, 2024

சிறுவன் நுரையீரலில் சிக்கிய பல்ப் அகற்றம்

image

சென்னை: போரூர் பகுதியைச் சேர்ந்த 5-வயது சிறுவன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எல்.யி.டி பல்பு ஒன்றை தவறுதலாக விழுங்கிவிட்டார். இதனையடுத்து அச்சிறுவனக்கு தொடர்ந்து மூச்சுத் திணறலும், தொடர் இருமலும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ததில், நுரையீரலில் பல்ப் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறிய பல்ப்பை அகற்றினர்.

News May 3, 2024

அரியலூர் கோதண்டராமசாமி கோயில் கட்டடக்கலையின் சிறப்பு!

image

கோதண்டராமசாமி கோயிலில் தசாவதார மண்டபம் எனப்படும் 20 அடி உயரமுள்ள 10 தூண்கள் உள்ள நான்கு வரிசை கொண்ட பரந்த மண்டபம் கோயிலில் உள்ளது. இதில் 6.6 அடி உயரமுள்ள விஷ்ணுவின் 10 அவதாரங்கள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. 90 அடி உயரமும் 6 அடுக்குகளும் உள்ள கோபுரம் முன்பகுதியில் உள்ளது. கோபுரத்தின் அடித்தளம் சுண்ணாம்பு கற்களாலும், மேற்பகுதி செங்கல் சுண்ணாம்புக்கலவையாலும் கட்டப்பட்டுள்ளது.

News May 3, 2024

கோவை: கேஎப்சி சிக்கனில் ஸ்டீல் கம்பி 

image

கோவையை சேர்ந்த சுதாகர் என்பவர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். மனைவி, இரு குழந்தைகள் கோவை சிங்காநல்லூரில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சுதாகரின் மனைவி நேற்று அப்பகுதியில் உள்ள பிரபல கேஎஃப்சி உணவகத்தில் 4 சிக்கன் வகைகளை ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்த போது ஸ்டீல் கம்பி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார்.

News May 3, 2024

கோவில் திருவிழாவில் மோதல்- 14 பேர் கைது

image

உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும், மாணிக்கம் என்பவருக்கும் நில தகராறு காரணமாக முன்பகை இருந்துள்ளது. நேற்று கோவில் திருவிழா மஞ்சள் நீராட்டு விழாவின் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கைகலப்பாக மாறி இருதரப்பும் கம்பு கற்களால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் 8 பேர் காயமடைந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

News May 3, 2024

பெரம்பலூர் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா!

image

சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. இதனால் கடலுக்கடியில் இறந்த உயிரினங்கள் புதைபடிவமாக மாறிப் போயின. பூக்கும் தாவரம் தோன்றுவதற்கு முந்தை காலத்தை சேர்ந்த 18 மீட்டர் நீளம் கொண்ட மரம் கல்லுருவமாகியுள்ளது.

News May 3, 2024

திருவாரூர்: ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹர்பன் பேங்க் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் முனைவர். ராஜ கணேசனுக்கு நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களை போட்டித் தேர்விற்கு தயார் செய்ததை பாராட்டும் விதமாக ஆசிரியருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் சார்பிலும் மாவட்ட கல்வி அலுவலர் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

News May 3, 2024

நெல்லையில் 106 டிகிரி வெப்பம் பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (மே 3) மதிய நிலவரப்படி நெல்லை மாநகரில் 106 டிகிரி ஃபாரண்ஹிட் வெப்பம் பதிவாகியுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.

error: Content is protected !!