Tamilnadu

News May 7, 2024

நாகை: ORS கரைசல் குடிநீர் வழங்கல்

image

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் விஜயகுமார் அறிவுரையின்படி பல்வேறு இடங்களில் ORS உப்பு சர்க்கரை கரைசல் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது,
இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணியில் லயன்ஸ் கிளப் உதவியுடன் பொதுமக்கள், பேராலயத்திற்கு வரும் யாத்ரீகர்களுக்கு ORS உப்பு சர்க்கரை கரைசல் குடிநீர் இன்று இலவசமாகவழங்கப்பட்டது ‌.

News May 7, 2024

திருவள்ளூர் பவானி அம்மன் கோயில் சிறப்பு!

image

திருவள்ளூர், பெரிய பாளையத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் கோயில். பாவனி அம்மன் கிருஷ்ணனின் தங்கையாக பாவிக்கப்படுகிறார். புராணக்கதையைக் கொண்ட இக்கோவிலில், சமீபத்தில் புரணமைக்கப்பட்டது. இதில் மாதங்கி அம்மனுக்கு தனிச்சன்னதியும் உள்ளது. அம்மன் கையில் சங்கு சக்கரம், வாள், அமிர்தக் கலசத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்திற்குள் அமைந்து அதன் அழகை அதிகரிக்கிறது.

News May 7, 2024

கார் கதவில் பைக் மோதி படுகாயம்

image

கரூர் வெங்கமேடு அரசி நகர் அருகே திட்ட சாலையைச் சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் சின்னகுளத்து பாளையம் டீக்கடை அருகே காரை நிறுத்தி இருந்துள்ளார். அப்போது திடீரென காரின் கதவை தங்கராஜ் திறந்த போது அவ்வழியே பைக்கில் வந்த சிவபிரகாஷ் கதவில் மோதி படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

News May 7, 2024

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றோர் கைது

image

சென்னையில், இன்று(மே 7) அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் தாக்கப்படுவதாக கூறி அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. முற்றுகையில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.

News May 7, 2024

புதுவையில் நாளை குடிநீர் சப்ளை ரத்து

image

ஒட்டம்பாளையத்தில் உள்ள கொம்பாக்கம் நீர்த்தேக்க தொட்டி கழுவும் பணிகள் நாளை நடக்கிறது.எனவே நாளை (ஏப்ரல்.8) மதியம் 12-2 கொம்பாக்கம், பாப்பாஞ்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், அதேபோல் முதலியார்பேட்டை, தேங்காய்த்திட்டு நீர்த்தேக்க தொட்டியை கழுவும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் (ஏப்ரல்.9)மதியம் 12 – 2 வரை தேங்காய்த்திட்டு அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் தடைபடும்.

News May 7, 2024

அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி

image

சேலம், இளம்பிள்ளை அடுத்த ஏகாபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் கோபால்-சந்திரசேகர். கட்டட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(மே 6) சந்திரசேகரின் மனைவியை, கோபால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே, சந்திரசேகர் தனது அண்ணன் கோபால் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சந்திரசேகரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

திண்டுக்கல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் அல்லது வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனம் ஜெயம் இன்று எச்சரிக்கை வைத்துள்ளார்.

News May 7, 2024

பள்ளிக்கு வராத மாணவர்களை தேடும் பணி

image

திருவாரூர் மாவட்டம் பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 9ஆம் வகுப்பு தேர்வு எழுதாத அல்லது நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவ மாணவியர்களை இல்லம் தேடி சென்று ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், காவல்துறை,
வட்டார கல்வி மைய ஆசிரியர், பயிற்றுநர் வட்டார வளமைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

News May 7, 2024

சத்தி: சொகுசு பேருந்து கவிழ்ந்து 17 பேர் படுகாயம்

image

ஈரோடு, சத்தியமங்கலம் அத்தானி ரோட்டில் அத்தப்பகவுண்டன்புதூர் பிரிவில் ஊட்டியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் சுற்றுலா பேருந்து மழை காரணமாக சாலையோரமாக நின்றிருந்த ரோடு போடும் இயந்திரம் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 7, 2024

காஞ்சிபுரம்: பதக்கம் வென்ற வீரர்களுக்கு வரவேற்பு

image

தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள், இன்று(மே 7) ஊர் திரும்பினர். அவர்களுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார் பாளையம் பூங்கா எதிரே உள்ள விளையாட்டரங்கில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!