Tamilnadu

News May 7, 2024

Breaking: அரியலூரில் கோர விபத்து: 4 பேர் பலி

image

அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால், இன்று மாலை கார் மோதியதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

கரூர் கடம்பவனேசுவரர் கோயில் சிறப்பு

image

கரூர் குளித்தலையில் உள்ள 65 ஆவது தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் கடம்பவனேசுவரர் கோயில் ஆகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 2ஆவது தலமான இதில் மூலவராக கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை உள்ளனர். புராணகாலத்தில் இவ்விடத்திற்கு குழித்தண்டலை என்ற பெயரும் உண்டு. இங்கு கடம்ப வனம் அதிகமிருந்ததாகவும் கூறுகின்றனர். இங்குள்ள முருகனுக்கு அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

News May 7, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கும் தமிழக அரசின் சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களை awards.fametn.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 7, 2024

திருச்சி அருகே தீ விபத்து

image

திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் தமிழகத்தில் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான முக்கொம்பு சுற்றுலா ஸ்தலம் அருகே இன்று நண்பகல் சாலையோரம் உள்ள வயல்வெளிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இதனை அடுத்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு வண்டி மற்றும் கண்டோன்மெண்ட் தீயணைப்பு வண்டி சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

News May 7, 2024

காட்டுமன்னார்கோயில்: வாலிபர் தற்கொலை

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த உடையார்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). பூக்கடை வைத்து நடத்தி வந்த இவர், சரிவர கடைக்கு செல்லாததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று நள்ளிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

கள்ளக்குறிச்சி கோமுகி அணை சிறப்புகள்!

image

1963இல் அன்றைய முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டும் பணி துவங்கப்பட்ட கோமுகி அணை, 1965 ஆம் ஆண்டு பக்தவத்சலம் காலத்தில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. 60 ஹெக்டர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த அணை மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

News May 7, 2024

சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

image

சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் 55 ஸ்பாக்களுக்கு இன்று(மே 7) போலீசார் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்ததாக ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

பல்லாவரம்: கல்குட்டையில் குளித்தவர் மாயம்

image

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெயிண்டர் செல்வகணபதி (36), இவர் நண்பர்கள் 4 பேருடன் நேற்று பல்லாவரம் அடுத்த பொழிச்சலூருக்கு வந்துள்ளார். அப்போது அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின் அங்குள்ள கல்குட்டையில் குளித்தபோது செல்வகணபதி ஆழமான பகுதிக்கு சென்று மாயமானார். தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு  வீரர்கள் நேற்று இரவும் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இன்றும் தேடி வருகின்றனர். 

News May 7, 2024

தொழில் முனைவோர் விருது: ராம்நாடு கலெக்டர் தகவல்

image

மாநில அளவில் சிறந்த தரம், ஏற்றுமதி, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது மற்றும் மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள் பேம் டி.என்., (FaMeTN) awards.fametn.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 20.5.2024 கடைசி நாள் ஆகும். தகுதியான தொழில் முனைவோர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

News May 7, 2024

தெற்கு ரயில்வே அட்டவணையில் மாற்றம்

image

சென்னை கடற்கரையில் இருந்து இன்றிரவு 8.35 மற்றும் 10.05 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில், இந்த ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இயங்கும். இது தவிர காட்பாடி- ஜோலார்பேட்டை சிறப்பு ரயில் மே 8, 10 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!