Tamilnadu

News March 22, 2024

குமரி: டாக்டருக்கு கொலை மிரட்டல்; வியாபாரி கைது

image

குமரி, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சூரிய ரேஸ்மி. இவர், நேற்று பணியில் இருந்தபோது அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த வியாபாரி அருள்ராஜன்(45) என்பவர் மதுபோதையில் வந்து, சூரிய ரேஸ்மியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்‌. இது குறித்த புகாரின்‌ பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்ராஜனை கைது செய்தனர்.

News March 22, 2024

புதுக்கோட்டை: கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

image

ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்யா. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்து வந்த நிலையில், நேற்று மேலநெம்மக்கோட்டையில்
உள்ள கிணற்றில் சத்யா குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்தியாவை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை

News March 22, 2024

ஆயுதங்களுடன் 7 பேர் கைது

image

தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார், மதன், கௌதம், சரண், பிரேம்குமார், லோகேஷ், கார்த்திக் உட்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 22, 2024

பாலத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

image

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாம்குளம் கண்மாயில் ஆண் சடலம் கிடப்பதாக நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.அவர் ஆவல் நத்தத்தை சேர்ந்த குருசாமி என்பதும் கண்மாய்பாலத்தில் அமர்ந்திருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததும் தெரிய வந்தது.

News March 22, 2024

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

image

ஆண்டிபட்டி வேளாங்கன்னி மாதா பள்ளி, போடி ஜ.கா.நி.மெட்ரிக் பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் வருகின்ற 24 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் சம்மந்தப்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி அலுவலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 22, 2024

திருப்பத்தூர்: எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்ற 177 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News March 22, 2024

ஈரோடு : ரூ.96.34 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 22, 2024

சிறுமி திருமணம் போக்சோவில் கைது

image

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. கட்டடத் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து அச்சிறுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று(மார்ச்.21) கைது செய்தனர்.

News March 22, 2024

பழனியில் நாளை முதல் 4 நாட்கள் நிறுத்தம்

image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி மலைக் கோவிலில் நாளை(மார்ச்.23) முதல் மார்ச்.26 வரை பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இரவில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் பக்தர்கள் தங்கரதம் இழுப்பதற்கும் அனுமதி கிடையாது. இன்று வழக்கம் போல் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். 

News March 22, 2024

ஏப்ரல் 1ஆம் தேதி இபிஎஸ் வேலூர் வருகை

image

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வாணியம்பாடியைச் சேர்ந்த மருத்துவர் பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!