Tamilnadu

News May 9, 2024

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் புன்னம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேலன் (46) நேற்று மாலை அவரது கிணற்று தோட்டத்தில் மின்மோட்டார் எடுத்துவிட சென்ற போது கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி செந்தில்வேலன் உடலை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 9, 2024

மயிலாடுதுறை அருகே விபத்து; பலியான உயிர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் கோமல் பிரதான சாலை சேத்திரபாலபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆடு ஒன்று அடையாளம் தெரியாத வாகன மோதி இன்று சாலையில் உயிரிழந்து கிடந்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆட்டின் உரிமையாளர்கள் ஆட்டினை எடுத்துச் சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News May 9, 2024

மதுரையில் நாய் வளர்க்க லைசன்ஸ்

image

மதுரை மாநகராட்சியில் வீடுகளில் நாய்களை வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த தீர்மானம் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது சென்னையில் நாய்கள் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News May 9, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

பெரம்பலூர்: 10ம் வகுப்பு சான்றிதழ் பெற அறிவுறுத்தல்..!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் செப். 2015 – செப். 2021 வரை 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தனி தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஆக.31ம் தேதி கடைசி தேதி ஆகும். எனவே சான்றிதழ் பெறாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் பெரம்பலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ரூ.45 தபால் வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட தபால் மூலமாக பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

நாகர்கோவில் அரசு கல்லூரியில் கலந்தாய்வு?

image

நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு பிரிவினருக்கான மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் (Sports), முன்னாள் ராணுவத்தினர் (Ex-Service man), தேசிய மாணவர் படை (NCC), பாதுகாப்பு படை வீரி(Origin of Anthamaan Nicobar) மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே 28,29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 10 – 15 வரை நடக்கும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

திருவாரூரில் 4 இடத்தில் குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்

image

ரூ.78 கோடியில் அம்ரூட் குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மையப்பன் ஓடம்போக்கி ஆற்று கரையில் புதிதாக 5 ராட்சத போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிடாரங்கொண்டான், கொடிக்கால் பாளையம், கேடிஆர் நகர், ஈவிஎஸ் நகர் ஆகிய இடங்களில் இந்த நீர்த் தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது.

News May 9, 2024

சேலம்: ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

image

சேலம் அருகே மல்லிக்குட்டை பாரதிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தோஷ்(12), அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் சுதர்சன்(11). அரசு பள்ளியில் படித்து வந்த இவர்கள், பள்ளி விடுமுறை காரணமாக நேற்று(மே 8) மல்லி குட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டனர்.

News May 9, 2024

அரூர்: விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.6.53 லட்சம் அபராதம்

image

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி ஆகிய இடங்களில் ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆம்னி பஸ், சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிய வண்டிகள், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் என 125 வாகனங்களுக்கு ரூ.6,53,000 லட்சம் அபராதம் விதித்துள்ளார்.

News May 9, 2024

ராணிப்பேட்டை: +2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு..!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் +2 முடித்த மாணவ, மாணவிகள் உயா் கல்வி என்ன படிக்கலாம் என்பது குறித்த கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி மே 13 ஆம் தேதி பூட்டுத்தாக்கு அன்னை மீரா பொறியியல் கல்லூரி மற்றும் அரக்கோணம் VGN மெட்ரிகுலேஷன் உயா்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!