Tamilnadu

News March 22, 2024

ராணிப்பேட்டை: மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என நேற்று(மார்ச் 21) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.

News March 22, 2024

சேலம்: 27 பேரின் லைசென்ஸ் ரத்து!

image

சேலம் சரகத்தில், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 மாதத்தில் மட்டும் போதையில் வாகனம் ஓட்டிய 27 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 49 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

2 நாட்கள் வேட்பு மனு தாக்கல் நடைபெறாது

image

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மாதத்தின் 4ஆம் சனிக்கிழமை நாளை (23.03.2024) (ம) நாளை மறுநாள் (24.03.2024) ஆகிய 2 தினங்களில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறாது என மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சங்கீதா இன்று (21.03.2024) அறிவித்துள்ளார்.

News March 22, 2024

தேர்தல் பணியில் 12,000 பேர்: கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு, தேர்தல் பணி அலுவலர்கள் பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வுசெய்து ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் 1,374 வாக்குப்பதிவு மையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என 12,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.

News March 22, 2024

கனவுகளுக்கு கைக்கொடுக்கும் பியூட்டி பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் பாண்டியன் நகர் காட்டாஸ்பத்திரி அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் இலவச திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சியின் கீழ் செயல்படும்( ASA SKILL PLUS) இலவச அழகு கலை பயிற்சிக்கு இன்று (மார்ச்.22) முதல் அட்மிஷன் நடைபெறுகிறது. இதன் பயிற்சி காலம் 4 மாதங்கள். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ள பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

கிருஷ்ணகிரி: நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை

image

மத்திகிரி தின்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சுமித்ரா (25) ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் சுமித்ரா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை, இதனால் மனமுடைந்த சுமித்ரா சம்பவம் அன்று தின்னூர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 22, 2024

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது எம்.பியாக உள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 22, 2024

செங்கல்பட்டு அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

image

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் சோதனை சாவடியில்
குமாரலிங்கம் (28) என்பவர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச். 22)பறிமுதல் செய்தனர். அதனை செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News March 22, 2024

தேனியில் ஐந்து பேர் கைது

image

அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள் சக போலீசாருடன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஜெயம் நகர் பின்புறம் கருப்பசாமி கோயில் அருகே கூட்டமாக சிலர் அமர்ந்திருந்தனர். போலீசார் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.அவர்களை சுற்றி வளைத்த போலீசார் சின்னசாமி, ராஜா, ராஜேஷ், கணேசன், அறிவழகன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

News March 22, 2024

திருவண்ணாமலை அருகே தீவீர சோதனை

image

திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட எல்லை பகுதியான கண்ணமங்கலம் சிசி ரோடு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை முதல் ஆரணி தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் சரவணன் பிரதாப் மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!