Tamilnadu

News March 22, 2024

காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட காங் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கருமாணிக்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி முன்னிலை வகித்தார். திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வாக்கு சேகரித்து பேசினார். மாவட்ட காங் பொறுப்பாளர்கள் செல்லத்துரை அப்துல்லா, ராஜாராம் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி பேசினர்.

News March 22, 2024

முரசொலிக்கு மன்னார்குடியில் உற்சாக வரவேற்பு

image

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முரசொலி இன்று காலை மன்னார்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரை நகர் செயலாளர் வீரா கணேசன், நகரமன்ற தலைவர் சோழராஜன் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் வரவேற்பளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

News March 22, 2024

அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

image

அதிமுக சார்பில் போட்டியிடும் சுர்ஜித் சங்கர் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதாபேராலய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வேதையன் , பாலை. செல்வராஜ், நகர செயலாளர் சாம்சங், தங்கக் கதிரவன் நகர பொருளாளர் இளையதாஸ் பங்கேற்றனர். 

News March 22, 2024

அதிமுக, திமுக, பாஜக நேரடி மோதல்

image

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் அதிமுக ஐடி விங் மாநில தலைவர் சிங்கை இராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இங்கு அதிமுக, திமுக, பாஜக நேரடியாக மோதுவதால் கோவை ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?

News March 22, 2024

திருச்சியில் 2547 வாக்குச்சாவடி மையம்.!

image

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்,தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுயது:திருச்சியில் 2547 வாக்குச்சாவடி மையம் உள்ளது.3053 வாக்குப்பதிவு இயந்திரம்,3053 கட்டுப்பாட்டு கருவிகள்,3037 விவிபேட் உள்ளன.மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. திருச்சியில் நேற்று மாலை வரை ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இன்று காலை ரூ15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

News March 22, 2024

வேலூர் எம்பி வேட்பாளருக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து

image

புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி அவருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என அக்கட்சியின் செயல் தலைவர் ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 22, 2024

நாமக்கல் : திமுகவில் இளைஞர்கள் ஐக்கியம்

image

நாமக்கல் மாவட்ட கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் 20 இளைஞர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 22, 2024

தேர்தல்: திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் யார்?

image

திருவள்ளூர் (தனி) எம்பி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எம்பி தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

News March 22, 2024

நீலகிரி மக்களவை தொகுதி: வேட்பாளர் விவரம்

image

நீலகிரி எம்பி தொகுதியின் பாஜக வேட்பாளர் பயோ டேட்டா இன்று (மார்ச் 22) அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்: எல்.முருகன், முகவரி-353, குருஜி, 1வது குறுக்கு தெரு, அண்ணா நகர், சென்னை. பெற்றோர்: லோகநாதன், வருடம்மாள், பிறந்த தேதி: 29.05.1977, கல்வி தகுதி: MLM, மனைவி: கலையரசி, டாக்டர், மகன்கள்: தர்னேஷ், இந்திரஜித், தொழில்: வக்கீல், அரசியல்வாதி, அரசு பதவி: ராஜ்யசபா எம்பி (மபி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

பெரம்பலூர்: வேட்பு மனு வாங்கி சென்ற 23 பேர்!

image

தமிழ்நாட்டில் 18வது மக்களவை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து, நேற்று(மார்ச் 21) வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் 23 பேர் வேட்பு மனு வாங்கி சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!