Tamilnadu

News March 22, 2024

வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவ கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தெரிவித்துள்ளார். மேலும் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் உடல்நலக் குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.

News March 22, 2024

தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

image

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் இன்று (மார்ச்.22) மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார். இப்பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் துணை ஆணையாளர் செல்வ சுரபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் என பலரும் கலந்து கொண்டனர்.

News March 22, 2024

கரூர்: உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.5,00,000 பறிமுதல்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஏடிஎம் நிரப்ப சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரகுமார் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.5,00,000 பறிமுதல் செய்தனர்.

News March 22, 2024

இன்று முதல் போட்டி தேர்வு மையம் தொடக்கம்

image

தமிழகத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காலாஞ்சிபட்டியில் ரூபாய் 15- கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வு இலவச மையத்தை கடந்த சில மாதங்கள் முன்பு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுக்கு இங்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.

News March 22, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

தி.மலை பங்குனி மாத பவுர்ணமி அன்று பங்கு உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுபோல திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வோரின் அதிகரிக்கும். எண்ணிக்கையும் இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.  பவுர்ணமி மற்றும் உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News March 22, 2024

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

image

ஆண்டிப்பட்டி வ.அண்ணாநகர் அருகே இன்று (மார்.22) மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியே வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.82,480 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

News March 22, 2024

திருநங்கைகள் 100% வாக்களிக்க வேண்டும்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருநங்கைகள் தபால் அட்டை மூலம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

News March 22, 2024

புதுவை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்

image

புதுச்சேரி ஆளுனராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவி ராஜினாமா செய்தியை தொடர்ந்து இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டனர்.

News March 22, 2024

குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நிறுத்தி வைப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களவை பொதுத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள், சிறப்பு முகாம்கள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

காங்கேயத்தில் லாரி மோதி தொழிலாளி பலி

image

காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட திருப்பூர் சாலை காந்தி நகரில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சாக்கு தைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில், இவர் நேற்று மாலை மருந்து வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!