India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

தூத்துக்குடியில் சவுண்ட் சா்வீஸ் தொழில் செய்துவரும் நபருக்கு முகநூல் மூலம் அறிமுகமாகிய நபா்தன்னிடம் குறைந்த விலையில் மின்னணு பொருள்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளாா். இதனால், அவா் கேட்ட ரூ.1.42 லட்சம் பணத்தை ஆன்லைனில் அனுப்பியுள்ளார். ஆனால் பொருட்கள் வந்து சேரவில்லை. இந்த மோசடி புகாரை அடுத்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமாரை (35) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஜன.1) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இன்று வெளியிடப்பட்ட செய்தியில் இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவருக்கும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- 2026 என செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2025ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் 27 கொலை வழக்குகளில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 98 பேருக்கு ஆயுள் தண்டனையும் வாங்கித் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுபோன்ற அதிக வழக்குகள் தண்டனை பெற்றுத் தருவது இதுவே முதல் முறையாகும் என மாவட்ட காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 கொலை முயற்சி வழக்கில் 21 பேருக்கு தண்டனை, ஒரு கூட்டுக் கொள்ளை வழக்கில் 2 கொள்ளை வழக்கில் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.

கீழப்பட்டியை சேர்ந்தவர் சர்வந்த் (8). 3-ம் வகுப்பு படித்து வந்த சர்வந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது தேள் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் திருச்சுழியை சேர்ந்த ஆனந்தராஜ்(29) கொட்டாம்பட்டி யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நேற்று புத்தாண்டு கொண்டாடத் திற்காக கொட்டாம்பட்டி டாஸ்மாக் கடைக்கு சென்றவர், நள்ளிரவு கத்தி காயங்களுடன் இறந்து கிடந்தார். கொட்டாம்பட்டி விஏஓ மூர்த்தி கொடுத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் கொலையாளிகள் குறித்து இன்று விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூரில் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் தரிசிக்க வேண்டிய கோயில்கள்! 1)திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில் 2)பசலிக்குட்டை முருகன் கோயில் 3)திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் 4)மயில் பாறை முருகன் கோயில் 5)வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில் 6)பாராண்டப்பள்ளி சிவன் கோயில் 7)கந்திலி வெக்காளியம்மன் கோயில் 8)பொப்பாயி அம்மன் கோயில். ஷேர் பண்ணி மற்றவர்களையும் இங்கல்லாம் போக சொல்லுங்க.

சூரக்குளம் திருவேலங்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்வி உதவித்தொகை குறித்த விளம்பரம் பார்த்து அதில் இருந்த ஐடி-யை தொடர்பு கொண்டுள்ளார். மேற்படிப்புக்கு கல்வி உதவி தொகை பெற, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 691 வரை செலுத்தியுள்ளார். பின் தான் ஏமாந்ததை அறிந்த அந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
Sorry, no posts matched your criteria.