Tamilnadu

News January 1, 2026

மேட்டூரில் அம்மன் நகைகளை திருடிய ஆசாமி கைது!

image

மேட்டூர் தூக்கணாம்பட்டி காளியம்மன் கோயிலில் கடந்த மாதம் 1ஆம் தேதி அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலி, வெள்ளி வேல் திருடப்பட்டது. இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (42) என்பவர் நகைகளை திருடி அவற்றை ஓமலூர் சின்னக்கடை வீதியில் உள்ள மெருகு கடையில் விற்றது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை கைப்பற்றிய போலீசார் ராஜேஷை சிறையில் அடைத்தனர்.

News January 1, 2026

பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
✅4 தாலுகா
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்
✅2 சட்டமன்ற தொகுதி
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்
✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்
✅4 பேரூராட்சிகள்
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

எரக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் பாக்கியராஜ்-ஆசைலட்சுமி மற்றும் சின்னசாமி-அம்பிகாபதி. இவர்களுக்கிடையே கடந்த ஆண்டு நடந்த தகராறின் போது பாக்கியராஜ்-ஆசைலட்சுமி தம்பதியரை, சின்னசாமி-அம்பிகாபதி தம்பதியர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம், சின்னசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அம்பிகாபதிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

News January 1, 2026

குமரி: மது என நினைத்து மருந்து குடித்தவர் பலி!

image

மேல கரும்பாறையைச் சேர்ந்தவர் செல்வின் குமார் (48). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் போதையில் மது என நினைத்து களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து போனார். இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

புதுவை: போலி ரசீது மூலம் ரூ.87 லட்சம் கையாடல்?

image

அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், கழிவறை கட்டுமான பணிகளில் ரூ.87 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் 2022-ம் ஆண்டு அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட கழிவறை திட்டத்தில் ரசீதுகள் மூலம் பணத்தை கையாடல் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

கரூரில் ரூ.1000 உதவி தொகை: அறிவித்தார் கலெக்டர்!

image

கரூர் மாவட்டம், சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு, கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இடை நிற்றலை குறைக்கவும் தமிழக அரசால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு அந்தந்த தலைமை பள்ளி ஆசிரியர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

திருவாரூர்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

பேரளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டார கல்வி அலுவலர்களை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத ஊதிய பட்டியலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் தயார் செய்வது போல அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய பட்டியல் தயார் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் முழக்கங்களை எழுப்பினர்.

News January 1, 2026

ஒட்டன்சத்திரத்தை அதிர வைத்த மோசடி!

image

கிரெடிட் கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பாண்டித்துரை, நகுல்பிரபு, செந்தில்குமார் ஆகிய மூவரிடமிருந்து ரூ.13 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட சந்தோஷ், மோசடி செய்ததால், பாதிக்கப்பட்ட மூவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

News January 1, 2026

திருவள்ளூர்: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

image

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த<> லிங்கில்<<>> சென்று உங்களது EPIC எண்ணை பதிவிட்டு, உங்களது வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளுங்கள்.<<18731340>> தொடர்ச்சி.<<>>

News January 1, 2026

திருப்பத்தூரில் டூவீலர், கார் உள்ளதா?

image

திருப்பத்தூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!