India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள அடுக்கம் பகுதியில் இன்று (12.05.24) பெய்த கனமழையால் நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டதடுப்புச் சுவர் சாலையில் விழுந்து வாகனங்கள் செல்ல இயலாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக செலும்பு , அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லக்கூடிய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பகுதியில் இன்று சரியாக 05:20 மணியளவில் எஸ் பெண்ட் எனும் வளைவில் கம்பம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷடவசமாக உயிர்பலி எதுவுமில்லை பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்
கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம், தி பெடரல் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் இணைந்து இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உலக செவிலியர் தினம் மற்றும் உலக அன்னையர் தினம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைசெல்வன் பங்கேற்று அசத்தி விழா குழுவினரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
செங்கோட்டை நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு12′ ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தென்காசி செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பாட்டாளர்கள் கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டு தேர்வு எழுதிய பின் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களிடம் வழங்கப்பட்டது. 150 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து ஐந்து மாணவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை
தாய்மார்களை போற்றும் வகையில் இன்று(மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில், “அன்னை என்பவர் வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத வகையில் நம் வாழ்வை வடிவமைக்கிறார். நம் வாழ்வின் பேரன்பு மற்றும் நெகிழ்ச்சி மிக்க அற்புதமான தூண்களுக்கு அன்னையர் தின வாழ்த்து” என்று பதிவிட்டுள்ளார்.
ஆலங்குளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் இயங்கும் முறைகள் குறித்து ஆய்வு பணி இன்று நடைபெற்றது. இதில் 23 பள்ளிகளில் உள்ள 58 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகவல்லி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 41 வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன மற்ற வாகனங்களின் குறைகளை இந்த மாத இறுதிக்குள் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மது கடத்தியவர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல் ரூ.7000 லஞ்சம் பெற்றதாக புகார் வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் தலைமை காவலர்கள் நாகராஜ், புஷ்பராஜ் சுரேஷ் ஆகிய நான்கு பேரும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஸ்ரீரங்கம், காந்தி சாலையில் மூன்றாவது முறையாக இன்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டதில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மின்னணு இயந்திரங்கள் ஆறு சட்டமன்றத் தொகுதிகளாக பிரித்து வெவ்வேறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர்,அதிரடிப்படை, உள்ளூர் காவலர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பில் உள்ள இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமரா தொடர்பாக எந்த ஒரு புகாரும் வராத வகையில் சுழற்சி முறையில் டெக்னீசியன்கள் பணியில் உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்தார்.
சீர்காழி அருகே புத்தூரில் சீனிவாசா சுப்புராய அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரே அரசு தொழில்நுட்ப கல்லூரியான இதில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க மே27ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் குமார் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.