India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனால்,மோப்பநாயின் உதவியுடன் ரயில் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், ஏ.சி.சண்முகம்-ரஜினிகாந்த் இடையேயான நட்பு, ஆன்மிக ரீதியிலான கருத்தொற்றுமை, பிணைப்பு அலாதியானது என்கின்றனர் அவர்களைப் பற்றி விவரமறிந்தவர்கள்.
நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக காலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இன்று (மார்ச் 23) காலை 7 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ராதாபுரம் வட்டாரத்தில் 10 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 16 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 62.40 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நயினார் நாகேந்திரன் நெல்லை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இன்று (மார்ச் 23) காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று மீண்டும் மோடி பிரதமராகவும் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டியும் தரிசனம் செய்தார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருட்கள் விநியோகம் நடப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை பொன்னேரி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. 1800 4256669 என்ற இலவச எண் மற்றும் 9445394453 புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 1963இல் பிறந்த இவரின் முழு பெயர் ஆண்டிமுத்து ராசா. இதுவரை மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இதுவரை தலா 4 முறை பெரம்பலூர், நீலகிரி பகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரத்தை நேற்று தொடங்கினார். இந்த வகையில் வரும் 29ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வுசெய்ய, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தேவராஜா திடலினை ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனிக்கு மீண்டும் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த முறை இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட நவாஸ் கனிக்கு இம்முறையும் அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஏணி சின்னத்தில் வாக்குச் சேகரிப்பில் நவாஸ் கனி தீவிரமாக ஈடுபட உள்ளார்.
தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன், மங்களமேடு அம்பிகாபதி, ஆதனூர் ஜீவா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய 4 பேர் 11 தங்கம், 1 வெள்ளி என 12 பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தனர். நேற்று பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுலிடம் பதக்கங்கள், சான்றிதழை காண்பித்து வாழ்த்துகளையும். பாராட்டுகளையும் பெற்றனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சௌமியா அன்புமணி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் அரசாங்கம் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.