India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெளிநாடுகளில் வேலை செய்ய விருப்பமுள்ள செவிலியர்களுக்கு அயல் நாட்டு மொழிகளான ஜெர்மன், ஜப்பான் போன்ற மொழிகளை இலவசமாக பயிற்சி அளிப்பது குறித்த, தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிற்சி குறித்த சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் (63791 79200) மற்றும் அலுவலக தொலைபேசி எண்களில் 044-22502267, 22505886 தொடர்புகொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்தமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (17.05.2024) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர்கள் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 24 25 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணைய வழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் இன்று (மே 17) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி மண்டல இணை இயக்குநர், சென்னை(வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி) பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி, “பி ஏரிக்கரை” புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை, கடலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் செயல் அலுவலர், செஞ்சி பேருராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோருடன் பார்வையிட்டு இன்று (மே 17) ஆய்வு மேற்கொண்டார். உடன் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் வாக்கு எண்ணுவதற்கு 18 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி இன்று (மே 17) ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போடி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சி அம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது. போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை அருவி போல் நீர்க்கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களில் சர்வர் குறைபாடு இருப்பதாக தூத்துக்குடி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் இன்று குற்றம் சாட்டியுள்ளனர். தபால் நிலையங்களில் உள்ள ஆதார் சேவை மையம் மட்டும் முறையாக செயல்படுவதாகவும், மற்ற வங்கி உள்ளிட்ட இ சேவை மையங்களில் ஆதார் சேவை சர்வர் குறைபாடு காரணமாக செயல்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆம்பூர் தாலுகா பப்னபள்ளி கிராமத்தில் மொத்தம் 64 பேருக்கு சமுக சான்றிதழ் வழங்க 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி ஆட்சியர் தர்பகராஜ் இ.ஆ.ப அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அவர்கள் வசிக்கக்கூடிய இடத்திற்கே சென்று சாதி சான்றிதழை வழங்கினர்.
ஒட்டன்சத்திரம் தாலுகா இடையகோட்டையில் இருந்து பள்ளபட்டி செல்லும் வழியில் உள்ள விவசாய இடங்களில் கிணற்றில் போதிய நீர் இல்லாமல் முருங்கை செடிகள் அனைத்தும் வாடிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் காய்ந்த செடிகள் அனைத்தும் மீண்டும் துளிர் விட துவங்கியதால் இன்று விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.