Tamilnadu

News January 1, 2026

நெல்லை: ஜன.4 முதல் வீடு தேடி வரும்

image

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் மாதம்தோறும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஜனவரி மாதத்தில் வருகிற 4, 5 ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரக்கோணம் டவுன் ஹால் கிளப்பில் நாளை (ஜன.2) தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்று திறனாளிகள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நீக்க, திருத்தம் செய்ய படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் இன்று (ஜன.1) அறிவித்துள்ளார்.

News January 1, 2026

BREAKING: கோவையில் புத்தாண்டிலும் மிரட்டல்!

image

கோவை முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ள நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று (ஜன.1) 25வது முறையாக வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பழைய, புதிய கட்டிடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் சோதனை நடத்தினர். எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் மிரட்டல் பொய் என தெரியவந்தது.

News January 1, 2026

இராணிப்பேட்டையில் பாஜக சார்பில் தெருமுனை கூட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்ட பாஜகவின் விஷராம் நகர கிளை சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பாரத பிரதமர் மோடி வழங்கிய நலத்திட்டங்களை விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கீழ் விஷராம் குலத்து பேடு பேருந்து நிறுத்தம் அருகில் மாலை 5:00 மணியளவில் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

News January 1, 2026

விழுப்புரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு

image

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் சரக டிஐஜி-யாக இருந்த உமா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டர், இதை அடுத்து விழுப்புரம் சரக டிஐஜி-யாக அருளரசு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இன்று (ஜன.01) விழுப்புரம் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில், விழுப்புரம் சரக டிஐஜி யாக அருளரசு பொறுப்பேற்றுக் கொண்டார்.

News January 1, 2026

தென்காசி: கடைகள் ஏல அறிவிப்பு

image

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பிரானூர் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளை வரும் ஜனவரி 12ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கடைகளும் வாடகைக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது. கடையை வாடகைக்கு ஏலம் எடுப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று பிரானூர் ஊராட்சி தரப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

இன்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்

image

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் இன்று (புத்தாண்டு) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி தினந்தோறும் அரைமணி நேரம் முன்னதாகவே 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னதாக புறப்படும் ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.

News January 1, 2026

தூத்துக்குடியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE செய்யவும்.

News January 1, 2026

நீலகிரி: அரசின் முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

News January 1, 2026

நாமக்கல்: அரசின் முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

error: Content is protected !!