Tamilnadu

News May 31, 2024

குடிபோதையில் விபத்து, பொதுமக்கள் சாலை மறியல்

image

குடிபோதையில் வாகனம் ஓட்டி இரட்டை விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வழக்கறிஞர் விஜயகுமாரை கைது செய்ய வலியுறுத்தியும் விஜயக்குமாருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து புனைவழக்கு பதிந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அப்பாவிகளை கைது செய்வதைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்  அய்யலூர் SK.நகரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

News May 31, 2024

மனித உயிர்களை மீட்பவர்களுக்கான விருது அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று (மே 31) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விபத்துக்கள் போன்றவைகளில் மனித உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படும் 3 விதமான விருதுகளை பெற தகுதி உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

News May 31, 2024

சிறப்பு பேருந்துகளை இயக்க ஆட்சியர் உத்தரவு

image

தமிழகத்தில் வருகிற ஜூன் 9ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 6244 காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 4 ” தேர்வு நடைபெற உள்ளது.மதுரையில் குரூப் 4 தேர்வு நடைபெறும் நாளில், தேர்வில் பங்கேற்போர் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு, மதுரை ஆட்சியர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

News May 31, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மே.,31) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் ஜோதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

நீச்சல் பயிற்சி வகுப்பு

image

கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த 28ஆம் தேதி துவங்கியது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் இந்த நீச்சல் பயிற்சி வகுப்பானது ஜுன் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய ஒரு அறிய வாய்ப்பு

image

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய விரும்பும் திருச்சியை சேர்ந்த தகுதி, விருப்பம் உள்ள செவிலியருக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர, தமிழ்நாடு அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்,வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

புதுகை: தனிப்படை காவல்துறையினர் அதிரடி

image

புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வந்திதா பாண்டேவின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, காரையூர் மற்றும் இலுப்பூர் ஆகிய காவல் சரகத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு வெவ்வேறு இடங்களில் திருடிய 4 திருடர்களை கைது செய்து அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News May 31, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் பணி மற்றும் பாதுகாப்பு பணி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன் இன்று (மே 31) நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகர காவல் துணை ஆணையாளர் ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் உடன் இருந்தனர்.

News May 31, 2024

விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

image

விருதுநகர் நல்லவன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி(20). இவருக்கு தலையில் அடிபட்ட நிலையில் மூளையில் உடைந்த எலும்பு ரத்தக்கட்டி இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குருமூர்த்திக்கு அரசு மருத்துவர்கள் உரிய சிகிச்சை வழங்கி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்பொழுது இளைஞர் குருமூர்த்தி நலமாக உள்ளார்.

News May 31, 2024

வேலூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு 10வது பட்டாலியன் என்சிசி மாணவர்களுக்கு இன்று (மே 31) வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!