Tamilnadu

News June 4, 2024

வேலூரில் கதிர் ஆனந்த் முன்னிலை

image

வேலூர் மக்களவை தொகுதியின் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்.
திமுக கூட்டணி 7215 வாக்குகளும், பாஜக கூட்டணி 2695 வாக்குகளும், அதிமுக 635 வாக்குகளும் பெற்றுள்ளன.

News June 4, 2024

அம்பை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

image

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக நயினார் நரேந்திரன் முதல் சுற்றில் பின்னடைவில் உள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று பாஜக நயினார் நாகேந்திரன் 2903,
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 3244 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 397 வாக்குகளும், நாம் தமிழர் 479 பெற்றுள்ளது.

News June 4, 2024

கோவை தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது

image

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக தபால் 5127 வாக்குகளை பெற்று முன்னலியில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 1341 தபால் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். தபால் வாக்குகள் பெற்று பாஜக அண்ணாமலை 1852 இரண்டாம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

மூன்று சட்டமன்ற தொகுதிகளில் திமுக முன்னிலை

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து இவிஎம் இயந்திரத்தின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் திமுக அமைப்பாளர் கனிமொழி முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

தேனி: ஏறுமுகத்தில் உதயசூரியன்

image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, தேனி தொகுதியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார்.

News June 4, 2024

மதுரையில் சு.வெங்கடேசன் முன்னிலை

image

மதுரை மக்களவை தொகுதியின் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
8 மேஜைகளில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 6590 வாக்குகள் எண்ணப்படும் நிலையில் முதலில் எண்ணப்பட்ட 80 க்கும் மேற்பட்ட வாக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 38, அதிமுக சரவணன் 20 வாக்குகளும், பாஜக சீனிவாசன் 15 வாக்குகள் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சு.வெங்கடேசன் முன்னிலை பெற்றுள்ளார்.

News June 4, 2024

ராதாபுரத்திலும் முன்னிலை வகிக்கும் பாஜக வேட்பாளர்

image

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் தபால் வாக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்த நிலையில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையிலும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகின்றார்.

News June 4, 2024

திண்டுக்கல் கட்சியினருக்கு முன்னால் எம்எல்ஏ அழைப்பு

image

திண்டுக்கல் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருவதால் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் திண்டுக்கல் காமராஜர், பெரியார் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் வருக என முன்னாள் எம். எல். எ. அழைப்பு விடுத்துள்ளார்.

News June 4, 2024

விழுப்புரத்தில் விசிக முன்னிலை

image

விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது விசிச வேட்பாளர் ரவிகுமார் முன்னணியில் உள்ளார்.

News June 4, 2024

வேலூர் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

image

மக்களவைத் தேர்தல் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்ன மையத்தில் இன்று எண்ணிக்கை தொடங்கியது. இதில் குடியாத்தம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுபலட்சுமி தலைமையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியது.

error: Content is protected !!