Tamilnadu

News January 2, 2026

கரூர்: மின் தடையா? உடனே அழைக்கவும்

image

கரூர் மாவட்டத்தில் மழை மற்றும் பல்வேறு காரணங்களுக்கு மின்தடை ஏற்படுகிறது. அவ்வாறு மின்தடை ஏற்படும்போது 1912 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 94458 50811 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். TNEB மொபைல் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க

News January 2, 2026

ஈரோடு: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 2, 2026

மதுரை: கால்வாயில் குளித்தவர் பரிதாப பலி

image

திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(57). திருமணம் ஆகாதவர். நேற்று அப்பன் திருப்பதி அருகே கள்ளந்திரி பெரியாற்று கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இவரது சகோதரி கீதா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

சேலத்தில் தாய், தந்தையை வெட்டிய மகன்

image

கெங்கவல்லி வலசக்கல்பட்டி சேர்ந்த தர்மராஜ். இவர் குடிபோதையில் இருந்த போது இவருடைய‌ தந்தை தாய்யுடன் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது எனது மகள் விஷம் குடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்று கத்தியை எடுத்து இரண்டு பேரையும் கழுத்தை வெட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் GHல் சேர்த்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கெங்கவல்லி போலிசார் விசாரணை நடத்தினர்.

News January 2, 2026

பல்லடத்தில் அதிரடி நடவடிக்கை

image

பல்லடம் அடுத்த அறிவொளி நகர் வாய்க்கால் மேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழியே வந்த லாரி ஒன்றை மடக்கி பிடித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது அதில் குட்கா பொருட்கள் இருந்து தெரிய வந்தது. மேலும் லாரி மற்றும் 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 2, 2026

புதுவை: பொங்கல் பரிசு விநியோக தேதி அறிவிப்பு

image

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் கௌரவ ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களைத் தவிர்த்து மொத்தம் 3.48 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் அரசின் சார்பில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பொருட்கள் தொகுப்பு நாளை (ஜன.3) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

திருவாரூர் மாவட்ட அட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 4 மற்றும் 5-ம் தேதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 வயதுடையோர் பெயர் சேர்க்க படிவம் 6; பெயரை நீக்கம் செய்ய படிவம் 7; திருத்தம் செய்ய படிவம் 8 ஆகிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News January 2, 2026

மேட்டுப்பாளையத்தில் திடீர் ரத்து

image

நீலகிரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் – குன்னூர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மரங்கள், பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் இன்று ஒரு நாள் காலை 7:10 மணிக்கு புறப்படும் ரெகுலர் மலை ரயில் மற்றும் 9.10 மணியளவில் புறப்படும் சிறப்பு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News January 2, 2026

ஈரோடு மாவட்டத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ?

image

ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு மேற்கு, தெற்கு மாவட்டத்தில் மொடக்குறிச்சி பெருந்துறை பவானி, வடக்கு மாவட்டத்தில் கோபி அந்தியூர் பவானிசாகர் என காங்கிரசார் பிரித்துள்ளனர். இதில் 120 விருப்ப மனு தாக்கல் ஆகியுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு மொடக்குறிச்சி கோபி தொகுதிகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கோபி மொடக்குறிச்சி தொகுதி ஏதாவது ஒன்றில் காங்கிரசுக்கு உறுதி கட்சியினர் தெரிவிப்பு.

error: Content is protected !!