India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 18 ஆம் சுற்று முடிவில் விசிக – 4,12,168, அதிமுக – 3,44,588, பாமக – 1,57,482, நாம் தமிழர் – 50,430, விசிக வேட்பாளர் ரவிக்குமார் – 67,580 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 24 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,01,144 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,11,600 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,51,617 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,07,499 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,89,544 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் 17 வது சுற்றின் முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் 3,33,852 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக 3,01,829 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக 71,317 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 14 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 17897 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 15818 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 10589 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 4149 வாக்குகளும் பெற்றுள்ளனர். 14 ஆவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2323 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான 10 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிய முறையே திமுக – 2,83,063 அதிமுக -1,20,619, பாமக -1,02,544, நாதக – 45,929 பெற்றுள்ளன. திமுகவை சேர்ந்த வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 1,62,444 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மாலை 5.45 மணி நேர நிலவரப்படி 18-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதிமுக – துரை வைகோ – 4,85,006, அதிமுக – கருப்பையா – 1,99,344, அமமுக – செந்தில்நாதன் – 92,274, நா.த.க – ராஜேஷ் – 93,734, 2,72,032 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் 17 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 449648, அதிமுக வேட்பாளர் 254926, பாஜக வேட்பாளர் 130478, நாதக வேட்பாளர் 68306 வக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் விட திமுக வேட்பாளர் 194722 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 18வது சுற்று முடிந்த நிலையில திமுக வேட்பாளர் அருண் நேரு 4,22, 995 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 1,48, 7052 வாக்குகளுடன் வது இடத்திலும் பாரிவேந்தர் 3 வது இடத்திலும் உள்ளார். பெரம்பலூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
திருப்பூரில் 18ஆவது சுற்றில் கே. சுப்புராயன் சிபிஐ- 4 லட்சத்து 9 ஆயிரத்து 331,
பி. அருணாச்சலம் (அதிமுக)- 3 லட்சத்து 3 ஆயிரத்து 327 ஏ.பி. முருகானந்தம் (பாஜக)-ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 896, எம்.கே சீதாலட்சுமி (பாஜக)-89 ஆயிரத்து 839 வாக்குகள் பெற்றுள்ளனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சம் வாக்குகளை தாண்டி பெற்றுள்ளார். இன்று மாலை 5.40 நிலவரப்படி திமுக வேட்பாளர் 394043, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 212589, பாஜக வேட்பாளர் 188547, நாதக வேட்பாளர் 118866 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.