Tamilnadu

News January 2, 2026

திருப்பத்தூர்: பா.ஜ.கவில் இணைந்த தொழிலதிபர்

image

வாணியம்பாடி நகரை சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் நேற்று (ஜன.1) புத்தாண்டை முன்னிட்டு பாஜகவில் இணைந்தார். மாவட்டத் தலைவர் தண்டாயுதபாணி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் வெங்கடேசன் கலந்துக்கொண்டார். பிறகு, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

News January 2, 2026

விளாத்திகுளம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24), இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் வலி தாங்க முடியாமல் மனவேதனையில் இருந்த பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், விளாத்திகுளம் போலீசார் விசாரணை.

News January 2, 2026

திருப்பத்தூர் காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டு வருகிறது. அவ்வாறு இன்று (ஜன.2) பகிரப்பட்ட செய்தியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் செய்தியை நம்பி ஏமாற வேண்டாம். இந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க இந்த #1930 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 2, 2026

BREAKING: திண்டுக்கல் அருகே பயங்கர விபத்து!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே, மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அரசு பேருந்து – லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. மேலும், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2026

தூத்துக்குடி ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அமலில் வந்துள்ள இந்த அட்டவணையில், வாஞ்சி மணியாச்சி, மைசூரு, திருநெல்வேலி, சென்னை, பாலக்காடு, மேட்டுப்பாளையம், ஒகா உள்ளிட்ட முக்கிய வழித்தட ரயில்களின் புறப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE

News January 2, 2026

தூத்துக்குடி: வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

image

தட்டார்மடம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (53). இவர் நேற்று புத்தன் தருவை ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை.

News January 2, 2026

மாற்று வழியில் கன்னியாகுமரி – ஹைதராபாத் ரயில்

image

கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் (ரயில் எண் 07229) ஜனவரி 02, 09, 23 மற்றும் 30 அன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருப்பி விடப்படும். மதுரை, கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News January 2, 2026

திருப்பத்தூரில் பஸ் மோதி பயங்கர விபத்து!

image

நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜன.2) டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த ஒரு காயம் இன்றி உயிர்த்தபினர். இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)

News January 2, 2026

தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டம்

image

அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.02) தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!