Tamilnadu

News January 2, 2026

மயிலாடுதுறை: இலவச ஓட்டுநர் பயிற்சி! Apply Now

image

மயிலாடுதுறை மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கை கிளிக் <<>>செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

கடலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி! Apply Now

image

கடலூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

சிவகங்கை: 2026 புதிய ரயில் நிலைய கால அட்டவணை

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள, செட்டிநாடு ரயில் நிலைத்திற்க்கு வந்து செல்லும் ரயில்களின் 2026ம் ஆண்டிற்கான புதிய ரயில் நேர அட்டவணை வெளியிட்பட்டுள்ளது. செட்டிநாடு ரயில் நிலையத்தை பயன்படுத்தும் அனைத்து இரயில் பயணிகளும் இந்த அட்டவணை நேரப்படி தங்கள் பயணங்களை அமைத்து கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

News January 2, 2026

விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 2, 2026

நீலகிரியில் கனமழையால் ரத்து!

image

நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக நிலவிய கடும் உறைபனி, வங்கக்கடல் வளிமண்டல சுழற்சியால் மாறி பனியின் தாக்கம் குறைந்தது. நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குன்னூர் – ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 2, 2026

குளித்தலை: திமுக முக்கிய பிரமுகர் உயிரிழப்பு

image

குளித்தலை நகர திமுக 5-வது வட்ட செயலாளர் மற்றும் குளித்தலை நகர் மன்ற உறுப்பினர் செல்வம் இன்று உடல் நல குறைவால் இயற்கை எய்தினார். அவரது இறப்பிற்கு குளித்தலை எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர், குளித்தலை நகர திமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் உழவர் சந்தை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News January 2, 2026

நாகை: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB) சார்பில் மஞ்சப்பை விருது பெற ஜன.15-க்குள், பிளாஸ்டிக் இல்லா நடைமுறைகளை பின்பற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் முதல் பரிசு ரூ.10 லட்சம், 2-ஆம் பரிசு ரூ.5 லட்சம், 3-ஆம் பரிசு 3 லட்சம் வழங்கப்படும் என மாவட்டம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 2, 2026

வாக்காளர் முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் 03.01.2026 சனிக்கிழமை மற்றும் 04.01.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான TANFINET இணையதள வசதி வழங்க தொழில் பங்கேற்பாளராக தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. இதற்கான விண்ணப்ப பதிவு TANFINET என்ற இணையதள போர்டல் https://tanfinet.tn.gov.in மூலம் நடைபெறுகிறது. இதற்கு ஜனவரி 14-க்குள் விருப்பமுள்ள பங்கீட்டாளர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு நாகை மாவட்ட ஆட்சியர்அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 2, 2026

“அரசியலை விட்டு விலகத் தயார்”-அமைச்சர் நமச்சிவாயம்

image

புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “போலி மருந்து விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு விலகத் தயார். முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொடர்பு இருந்தால் அரசியலை விட்டு அவர் விலக தயாரா?.” என சவால் விடுத்தார். அப்போது டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!