Tamilnadu

News June 4, 2024

விருதுநகரில் காங்கிரஸ் வெற்றி

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,82,876 மேல் வாக்கு பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,78,243 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். 4,628 வாக்குகளில் காங், முன்னிலையில் உள்ள நிலையில் இன்னும் 4,480 வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டியுள்ளது.

News June 4, 2024

அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 5,48,307 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். அதிமுக 2,49,051 வாக்குகளும், பாமக 1,96,846 வாக்குகளும், நாதக 96,058 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்று வெற்றியை நழுவ விட்டனர்.

News June 4, 2024

விழுப்புரத்தில் மீண்டும் ரவிக்குமார் எம்பி வெற்றி

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 25 ஆவது இறுதிச்சுற்று முடிவில் விசிக -4,74,230, அதிமுக – 4,04,503, பாமக – 1,80,020, நாம் தமிழர் – 56,766 பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 69,727 வாக்குகள் வித்தியாசத்தில் ரவிக்குமார் எம்பி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

News June 4, 2024

குமரி: படுதோல்வியடைந்த பொன்னார்

image

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வியடைந்துள்ளார். விஜய் வசந்தை எதிர்த்து போட்டியிட்ட இவர் 3,58,958 வாக்குகளே பெற்று, சுமார் 1,68,360 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். 1991 இல் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு வரும் இவர், 1996 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,49,423 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,68,432 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 2,07,366 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,38,721 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,80,991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்..

News June 4, 2024

வேலூர் வெற்றிச் சான்றிதழ் பெற்ற திமுக வேட்பாளர்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் கதிர் ஆனந்த்  215702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுபலட்சுமி வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 4, 2024

விருதுநகரில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் மாணிக்கம் தாகூர்

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 24வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 547 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 682 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 219 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 152 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 23வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4633 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

விருதுநகர் 21 வது சுற்று முடிவுகள் வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 21வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 7986 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 8691 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 3040 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 1860 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 21வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4843 வாக்குகள் பெற்று முன்னிலை.

News June 4, 2024

விருதுநகர் 22 ஆவது சுற்று முடிவுகள் வெளியீடு!

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 22வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 5222 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 5482 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 2072 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 1210 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 22வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4583 வாக்குகள் பெற்று முன்னிலை.

News June 4, 2024

விருதுநகர் 23 வது சுற்று முடிவுகள் வெளியீடு

image

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி 23வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்- 341 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்- 156 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்- 49 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக்- 29 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் 23வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4768 வாக்குகள் பெற்று முன்னிலை.

error: Content is protected !!