Tamilnadu

News March 26, 2024

காஞ்சிபுரம் அருகே தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி

image

2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று காலை காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News March 26, 2024

சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவிப்பு

image

சென்னை குடிநீர் வாரியத்துக்கு, நிகழாண்டின் 2ம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களை செலுத்த ஏதுவாக, வரும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 31) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் செயல்படும் என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.

News March 26, 2024

திண்டுக்கல்: சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல்

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, சில்லப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகஜோதி(37). இவர் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடியிடம் சுயேட்சையாக போட்டியிட  வேட்பு மனுவை வழங்கினார். 

News March 26, 2024

எஸ்டிபிஐ வேட்பாளர் சொத்து மதிப்பு 

image

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ,  வேட்பாளர்கள் முகமது முபாரக் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் பெயரில் ரூ.4.54 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.4.50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், தனது மனைவி பெயரில் ரூ.6.28 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

News March 26, 2024

திருவள்ளூர்: 10ஆம் வகுப்பு தேர்வு துவக்கம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியரும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்கு மேஜைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 26, 2024

ராணிப்பேட்டை: 12,038 விளம்பரங்கள் அகற்றம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி, பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த 12,038 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வளர்மதி நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

திமுக வேட்பாளர் சொத்து மதிப்பு வெளியீடு

image

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயரில் ரூ. 4.69 லட்சம், மனைவி பெயரில் ரூ.7.28லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.14 லட்சம் மதிப்பிலான பூர்விக அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனது பெயரில் ரூ.3.10 லட்சம், மனைவி பெயரில் ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.7.85 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

News March 26, 2024

நெல்லை வருகை தரும் அண்ணாமலை

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு வருகை தந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 26, 2024

சேத்துப்பட்டில் திமுக தேர்தல் பிரச்சாரம்

image

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. எம். எஸ் தரணிவேந்தனை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

News March 26, 2024

திண்டுக்கல் கொலையில் 3 பேர் கைது

image

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள சி.கே.சி.எம் காலனி பகுதியைச் சேர்ந்த வீராகௌதம் கொலை செய்யப்பட்ட வழக்கில்  போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சவேரியார் பாளையம் நேருஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (24), மதுரை சேர்ந்த விஜய் ஆதி ராஜ், திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் சுந்தர் (38) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!