India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) இரவு நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக அவர் விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை நெல்லை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
நாமக்கல் அருள்மிகு ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நாமகிரி தாயார் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர். தேர் வலம் வரும் வீதிகளில் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 438 பள்ளிகளில் பயிலும் 17,194 மாணவர்கள், 15,778 மாணவிகள் என மொத்தம் 32,972 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக மொத்தம் 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,957 தனித் தேர்வர்கள் 7 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் கடலூர் மஞ்சகுப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. பொது தேர்வுகள் துவங்கி உள்ள நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை,
மாவட்ட ஆட்சித்தலைவர்
ஐ.சா. மெர்சிரம்யா, இ.ஆ.ப., இன்று (26.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர்
வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, வட்டாட்சியர் சூரிய பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
வரும் ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையும், நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு மையமும் இணைந்து ‘வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘யினை கல்லூரி வளாகத்தில் 26/03/24 நடத்தியது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று (மார்ச் 25) தொடங்கியது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள முஸ்லிம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் அமமுக தமாக புதிய நிதி கட்சி இந்திய ஜனநாயக கட்சி தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள பெரியார் அரசு கலை கல்லூரி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தினை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் உடனடியாக அமைக்க வலியுறுத்தினார்.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நேற்று (மார்ச் 25) வரை 6 பேர் நீலகிரி ஆட்சியரிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், வையாபுரி, முருகேசன், பத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.