India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.9) மாவட்டத்தில் அதிகபட்சமாக 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, ஸ்ரீரங்கம்,,தொட்டியம், துறையூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரம்பூர் ஆகிய வட்டங்களில் 301 தேர்வு மையங்களில் 66 ஆயிரத்து 949 பேர் குரூப் 4 தேர்வை இன்று எழுதினர். 18 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுதவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஆய்வு செய்த பின்பு தெரிவித்தார்.
மதுரை – சண்டிகர் ரயிலின் இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 9) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சண்டிகர் விரைவு ரயில் (12687) திங்கட்கிழமையன்று (ஜூன் 10) அதிகாலை 01.30 மணிக்கு 115 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நாளை மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் தாலுகாவில் 1,420 பேரும், குமாரபாளையம் தாலுகாவில் 606 பேரும், மோகனூரில் 431 பேரும், ப.வேலூரில் 1,008 பேரும், ராசிபுரத்தில் 2,630 பேரும், சேந்தமங்கலத்தில் 856 பேரும், திருச்செங்கோட்டில் 2,186 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 10,137 பேர் தேர்வு எழுத வரவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத 59883 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 47676 பேர் இன்று மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 12207 பேர் தேர்வு எழுதவில்லை என கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே நிலையத்தில் “ஆபரேஷன் ரயில் சுரக்சா” என்ற பெயரில், RPF மற்றும் CIB பிரிவு ரயில்வே போலீசார் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படி இருந்த 4 பேரைப் பிடித்து விசாரிக்கையில், அவர்கள், ரயில்வே பொருட்களை திருடியுள்ளது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 4 பேரையும் நேற்று கைது செய்து, அவர்கள் திருடிய பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம் வட்டம் அரங்கூர் முல்லை நகரில் நேற்று பாண்டி என்பவர் வேகமாக டூவீலரில் சென்றுள்ளார். அங்கு இருந்தவர்கள் ஏன் வேகமாக செல்கிறாய் என்று தகாத வார்த்தைகளை பேசியும் குச்சியால் கல்லாலும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பாண்டி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்கிய நான்கு பேர் மீது தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்கப்படுவதால் ஏராளமானோர் இன்று (ஜூன் 9) வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனையொட்டி திருநெல்வேலியிலிருந்து சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். மேலும் சென்னை செல்லும் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் குரூப் IV தேர்வுக்கு 6 தாலுகாக்களில் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 9956 பேர் தேர்வு எழுதினார்கள். நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மு.அருணா, உதகை வுட் சைடு பள்ளி மற்றும் சி.எம்.எம் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் தேர்வை இன்று பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.