India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், ”
முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சி அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் ஆகியவற்றுடனான முரண்பாடான நிலைப்பாட்டால் , நீண்ட காலம் இந்த NDA கூட்டணி நீடிக்காது” என்றார்.
சிதம்பரம் அருகே உள்ள கொள்ளுமேடு கிராமத்தில் அல் அமான் கல்வி அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன (பிம்ஸ்) மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நேற்று (ஜூன்-9) நடத்தியது. முகாமுக்கு பள்ளி தாளாளர் என்.அமானுல்லா தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் தங்கதுரை முகாமை தொடங்கிவைத்தார். சமூகநல செயற்பாட்டாளர் ராயநல்லூர் ரவி பிரகாஷ், பள்ளி நிர்வாகி உவைஸ் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் – மயிலம் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் நேற்று (ஜூன் 9) நடைபெற்ற, பாட்டாளி சமூக ஊடக பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் டி.வெற்றிச்செல்வம் – எஸ்.விஜயா இணையரின் திருமண விழாவில் பசுமலை தியாகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன் பாமக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் கோயில் விழாவுக்கு வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து சுமதி திருநாவலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன் 9) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 200 லிட்டர் கள்ளச்சாராயம், 2400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 116 மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரேநாளில் 32 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சங்ககிரி கல்வி அறக்கட்டளை சார்பில் சங்ககிரி அரசு மகளிர் மேல் நிலைபள்ளியில் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் பொந்துகிணறு பகுதியை சேர்ந்த மாணவி வர்ஷினிக்கு ஒரு வருடத்திற்கு தேவையான நோட்ஸ் மற்றும் நோட்டுகள் இன்று டிரஸ்ட் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் வரதராஜ், சண்முகம், ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
நெல்லை மாவட்டம் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று (ஜூன் 9) மாலை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக மோடி இன்று பதவி ஏற்றதைத் தொடர்ந்து பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதில் அப்பகுதி பாஜக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருத்தணி முருகன் மலைக் கோவிலில் தற்போது பெய்த மழையால் வெள்ளம் முறைப்படி வழியாகச் சென்றது. மேலும் மலை படிகட்டுகள் மற்றும் அங்குள்ள பாவாடை விநாயகர் கோவில் வளாகத்தில் மண் படிந்திருந்தது. பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை என்பதாலும், முகூர்த்த தினம் என்பதாலும் நேற்று காலை கோயில் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் படிகளில் படிந்துள்ள மண்ணை அகற்றினர்.
கோபி அருகே கொங்கர்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில் சுமார் ரூ.19,200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும், லாட்டரி விற்ற பணம் ரூ.13,000 ரொக்க தொகையையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி நேற்று இரவு பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து 71 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவை கொண்டாடும் வகையில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாஜக நகர தலைவர் முரளிதரன் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் கலாராணி தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Sorry, no posts matched your criteria.