India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர்
பாத்திமா பசீரா தாஜ் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளையும் முழுமையாக வெற்றி பெற்றதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சக்ஷா பதக்க விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற விருப்பமுள்ளவர்கள் awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.6.2024 ஆகும். மேலும் விபரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017- 03516 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், தேர்வு நடத்துவதில் இருந்து தேசிய தேர்வு முகமை (NTA)எனும் தனியார் நிறுவனைத்தை விளக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சிவானந்த் தலைமையில் நடைபெற்றது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும்
என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழித்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
இந்திய உச்ச நீதிமன்றம் 2024 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் மூன்று வரை சிறப்பு லோக் அதாலத் வாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு லோக் அதாலத்தின் நன்மைகள், விரைவான சமரசம் மற்றும் சர்ச்சைகளை தீர்ப்பது மற்றும் சர்ச்சைகளுக்கு செலவு குறைந்த தீர்வினை அளிப்பதாகும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி
கொள்ள திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி இன்று (ஜூன் 11) அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டனர்.
திருச்சியில் கடந்த 29.5.2024ம் தேதி பெரிய மிளகுபாறை பகுதியில் 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த ஜாபர் அலி மற்றும் 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் ஜாபர் அலி மீது 4 திருட்டு வழக்கு, பாலக்கரை,உறையூர், தில்லைநகர் காவல் நிலையங்களில் 1 வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், இவரை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (NHIS) தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்த வேண்டும், அரசாணையில் தெரிவிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 13 மாலை நெல்லை தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்திற்கு 2024- 2025ம் ஆண்டிற்காக சிறுபான்மை இன மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் கழகம் மூலம் ரூ.2.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருச்சியில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய புத்த மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று உடனே அதனை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு
வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சியபனைகள்,
கருத்துரைகள் இருந்தால் பொதுமக்கள் அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் மதிப்பீட்டு துணை குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் குப்பையில்லா குமரியாக மாற்றுவது குறித்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.