India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதை கண்டித்து, 687ஆவது நாளாக இன்று மத்திய மாநில அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைந்தால் தங்களின் விவசாய நிலங்கள் இலக்க நேரிடும் எனவும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவோம் எனவும் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போஸ்டரில் உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும்,கழிவு நீரை விவசாய நிலங்களில் திறந்து விடுவதாகவும்,அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சூழலில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து பெற்றுள்ள நாதக இந்த இடைத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுமா, மைக் சின்னத்தில் போட்டியிடுமா? அல்லது வேறு சின்னத்தை சீமான் தேர்வு செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, காட்பாடியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு காலை 9.30 மணிக்குச் செல்லும் மெமு விரைவு ரயிலும், மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு நண்பகல் 12.45-க்கு செல்லும் மெமு விரைவு ரயிலும் நேற்றுமுதல் (ஜூன் 11) வரும் 30ம் தேதிவரை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கலெக்டர்கள் கூட்டம் மண்டல வாரியாக 11, 13, 15, 19ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 15இல் நடைபெறும் கூட்டத்தில் திருச்சி, புதுகை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் 15ம் தேதி சென்னை செல்கிறார்.
மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மடத்தூர் மயிலாபுரம் பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக 20-க்கு மேற்பட்ட பெருங்கற்கால கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. எனவே மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் பாகசாலை லக்ஷ்மி விலாசபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாட்டுவண்டி, இருசக்கர வாகனங்களில் மணல் கொள்ளை நடப்பதால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடம் மாறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. கடந்த மூன்று வாரங்களாக மணல் கொள்ளை அதிகரித்துவருகிறது. இது குறித்து திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் 11ம் வகுப்பு படித்துவருகிறார். அவர் கடந்த 7ம் தேதி டியூசன் முடிந்து இரவு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரதீஷ், ஆதித்யன் ஆகிய இருவர் அவருடன் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தனர். அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் போலீசார் நேற்று அடித்த இருவரையும் கைது செய்தனர்.
ECR பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை-மாமல்லபுரம் சுங்கச்சாவடியில் கார் ஜீப், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 முதல் 68 வரையும், இலகு ரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.1 முதல் 110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வருத்தத்தில் உள்ளனர்.
சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமன் நேற்று நீலகிரியில் செய்தியாளரிடம் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் அறிவித்த கையோடு மேடையில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அதற்கான காசோலையும் வழங்கினார். ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை” என்றார்.
Sorry, no posts matched your criteria.