Tamilnadu

News June 12, 2024

வரத்து குறைவால் கிலோ ரூ.200 ஆக விலை உயர்வு

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த இஞ்சி வியாபாரிகள் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து இஞ்சி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இஞ்சி இறக்குமதி செய்யக்கூடிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இஞ்சியின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தேனி சந்தைகளில் கடந்த வாரம் கி.80 என விற்கப்பட்ட இஞ்சி தற்போது கி.200 என விற்கப்பட்டு வருகின்றது

News June 12, 2024

நாளை மின்தடை அறிவிப்பு

image

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை( ஜீன்.13) நடைபெற உள்ளதால் ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பிகே புதூர் பணியம்பள்ளி ,  தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர்,  கவுண்டம்பாளையம், மாடுகட்டி பாளையம், எளையாம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 12, 2024

நாளை மின்தடை அறிவிப்பு 

image

அரியலூர் கூத்தூர் துணைமின் நிலையத்தில்  நாளை(ஜூன்.13) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அரியலூர் மேற்கு பகுதி, மேலமாத்தூர், ஜெமீன் ஆத்தூர், கூத்தூர், கூடலூர், வெண்மணி, தீம்மூர், மேத்தால் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்லபாண்டி தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

வெள்ள பாதிப்பு குறைகளை கேட்ட அமைச்சர்

image

தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 126 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை இன்று(ஜூன் 12) தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

News June 12, 2024

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த ஜெரினா என்ற பெண் ரயில் மோதி உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெரினாவின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News June 12, 2024

திருச்சி: 15ம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம்

image

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் லால்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது லால்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும்
15-ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே இதில், எரிவாயு நுகர்வோர்கள், தன்னார்வ
நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

News June 12, 2024

கொடைக்கானலில் ஏரிக்குள் பாய்ந்த கார்

image

பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் பலர் மோட்டார் சைக்கிள், சைக்கிள் மற்றும் கார்  ஓட்டி பழகுகின்றனர். இந்நிலையில் இன்று கார் ஓட்டி பழகும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்தது. இதையடுத்து காரை வெளியே எடுக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

News June 12, 2024

தென்காசி அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

தென்காசி, வி.கே.புதூர் வட்டத்தில் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் மூலம் தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையின் கீழ் அனைத்து முதல் நிலை அலுவலர்களும் வருகிற 19ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வி.கே.புதூர் சேனைத்தலைவர் மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவரது குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

News June 12, 2024

கலக்கத்தில் காவல்துறையினர்!

image

விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல்துறையில் 1999 ஆண்டு இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஜூன் 1 முதல் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி இதுவரை பதவி உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்துவதாக போலீசார் புலம்புகின்றனர்.

News June 12, 2024

விருதுநகரில் 31 கால்நடை உதவி மருத்துவர்கள் நியமனம்

image

விருதுநகரில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 87 உதவி மருத்துவர்கள் இருக்க வேண்டும்.ஆனால் 55 உதவி மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.இதனால் மீதமுள்ள 32 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில் கால்நடை உதவி மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் 31 பேர் மாவட்டத்தின் மருந்தகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கான தேவையான மருத்துவம் தடையின்றி கிடைக்கும்.

error: Content is protected !!