India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நேற்று(ஜூன் 11) மாவட்ட முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 12 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 170 மது பாட்டில்களையும் ரூபாய் 7420 பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி பயிற்சி பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9: 00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நல்லவன்பாளையம், தேனி மலை, அண்ணாநகர், எடப்பாளையம், வேல் நகர், கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று(ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.
உச்சிப்புளி வட்டார வேளாண்துறை சார்பில் மானாங்குடியில் அட்மா கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு காரிப் (கோடை) பருவ பயிற்சி இன்று நடந்தது. முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கோடை உழவு, மண் பரிசோதனை, உழவன் செயலி பயன்பாடு குறித்து உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி மேலாளர் பவித்ரன் பேசினர். உச்சிப்புளி வேளாண் வட்டார அட்மா திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.
அரியலூர், ஆண்டிமடம் அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர இணையதளம் வாயிலாக ஜூன்.13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் தொழிற்பயிற்சி நிலையம் தொலைபேசி -9499055877, ஆண்டிமடம் தொழிற்பயிற்சி -9499055857 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் இன்று (ஜுன்12) மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகபட்சமாக 109 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.46 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 79.70 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் துளசிராவ் வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சத்யாவை ராமமூர்த்தி கத்தியால் குத்தியுள்ளார். தொடர்ந்து தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். சிகிச்சை பெற்று வந்த சத்தியா இன்று உயிரிழந்த நிலையில் போலீசார் கொலை வழக்காக மாற்றி ராமமூர்த்தியை கைது செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை, மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கண்டு தங்களது கிராம வருவாய் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.