India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டர் ஒன்றிற்கு ரூ.18000 மானியத்தில் மா,கொய்யா, தென்னை, எலுமிச்சை கன்றுகள் வழங்கப்படவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க இதற்கான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவரங்களை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமையில் சிறப்பு மனு முகாம் இன்று நடைபெற்றது. இச்சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி பொதுமக்களிடம் மனுவை பெற்றார். இந்த மனு முகாம் மூலம் 24 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழிசை சவுந்தராஜன் அவர்களை, மேடையில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்தது போன்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் அமித்ஷாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை நாடார் மகாஜன சங்கம் சார்பில் கண்டனம் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பேசிய நெல்லை மாவட்ட நாடார் மகாஜன சங்க தலைவர் அசோகன், எங்களது சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான போஸ்டர் இது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் அருகே சுக்காம்பட்டி இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும், விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை மாதம் பத்தாம் தேதி நடைபெற இருப்பதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பட்டு அறையை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு நிகழ்வும் கணினி மூலமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.06 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளை கலெக்டர் நேற்று வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியில் தொடர் கனமழையின் எதிரொலியாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதன்படி 20 கிலோ கொள்ளளவு கொண்ட ஒரு கிரேட் தக்காளி பழம் 1200 முதல் 1500 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட ஒரு கிலோ தக்காளி மீது 20 ரூபாய் விலையேற்றம் அடைந்துள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அம்பேத்கரின் முழு உருவ சிலையை அகற்றிய மத்திய அரசை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார்பில் வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (ஜூன் 13) நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான செ.கு. தமிழரசன் கண்டன உரை ஆற்ற உள்ளார் என கட்சியின் சார்பில் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.