Tamilnadu

News June 13, 2024

கலைஞர் நூலகத்தில் புதிய முறை அறிமுகம்

image

மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் புத்தகம் இரவல் பெற தனிநபர், குடும்பம், மூத்த குடிமக்கள், மாணவ, மாணவியர் என 4 வகை உறுப்பினர்களுடன், நிறுவனங்கள், கல்வி நிறுவன உறுப்பினர் என புதிய வகை உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கும் , தனியார் அலுவலகங்களுக்கும் முதல்முறை உறுப்பினர் கட்டணம் ரூ.1500, ஆண்டு சந்தா ரூ.500. இவ்விருவகையிலும் 25 புத்தகங்கள் வரை இரவல் பெறலாம்.

News June 13, 2024

தொழில் பழகுநர் பயிற்சிக்கு அழைப்பு

image

அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில்சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு இயந்திரவியல், தானியங்கியல் ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.com ல் ஜூலை.8க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 13, 2024

பெட்ரோல் குண்டு வீச்சு; ராணிப்பேட்டையில் கைது

image

சென்னையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ராணிப்பேட்டையில் போலீசார் இருவரை கைது செய்தனர். அப்போது, தப்பி ஓடிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில், சென்னையையில் செந்தில்குமார் என்பவர் தங்களை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டு, அவர் கஞ்சா விற்று வருவதாகவும், இதனால் அவரை அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

News June 13, 2024

பெரம்பலூர்: பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்

image

குன்னம் அடுத்த வேப்பூர் பகுதியை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வேளாண்மை அலுவலகம், அரசு மகளிர் கல்லூரி, சார் பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை இருப்பதனால், ஓலைப்பாடி ஊராட்சியில் இருந்து பிரித்து வேப்பூர் பேரூராட்சியாக அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News June 13, 2024

குமரியில் 61 போலீசாருக்கு பதவி உயர்வு

image

தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளில்,  பிரச்னை இன்றி பணியாற்றியவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த 61 போலீஸ் ஏட்டுகள், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்து உள்ளார். பதவி உயர்வால் 61 போலீஸ் ஏட்டுகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 13, 2024

சேலம்: 5 பேர் பலியான விபத்தில் ஒருவர் கைது

image

சேலம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது தனியாா் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனங்களில் சென்ற இரு குழந்தைகள் உள்பட 5 போ் பலியாகினா். முதற்கட்ட விசாரணையில், தனியாா் பேருந்து வேகமாக வந்ததுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. வேகத்தடை போடப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் அதன்மீது ஏறியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News June 13, 2024

காஞ்சியில் சிக்கிய 5 செல்போன் திருட்டு: 5 பேர் கைது

image

ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்த்த சந்தன், சிப்புன் 2 பேர் உள்பட, செல்போன் கடை உரிமையாளர்கள் மகேஷ், ராம், மகேஷ் 3 பேரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட 15 செல்போன்களையும் கைப்பற்றியுள்ளனர்.

News June 13, 2024

தருமபுரி: “திமுகவினர் பங்கேற்க வேண்டும்”

image

கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவில், அனைத்து திமுகவினருக்கு பங்கேற்க வேண்டுமென தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவையில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் அனைத்து பங்குபெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 13, 2024

செங்கல்பட்டில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். வழக்கமான தாசில்தார்கள் திருப்போரூர் பூங்கொடி, வண்டலூர் ராஜேந்திரன், மதுராந்தகம் ராஜேஷ், தாம்பரம் நடராஜன், செய்யூர் ராதா, நில எடுப்பு தனி தாசில்தார்கள் துரைராஜன், செங்கல்பட்டு சரவணன், வாசுதேவன், செங்கல்பட்டு சப்-கலெக்டர் பி.ஏ.ராஜன் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News June 13, 2024

தென்காசி:கசடு சுத்திகரிப்பு ஆலைக்கான செயல்பாடு பயிற்சி

image

தென்காசியில் மலம் கசடு சுத்திகரிப்பு ஆலைக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் வெளிப்பாடு வருகை மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.இதில் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார ஆதரவு திட்டத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவால் இந்திய மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் சார்பில் சிவராஜ் மற்றும் பிருத்வி மோகன் ஆகியோர் பயிற்சி கொடுத்தனர்.

error: Content is protected !!