India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த மர்ம வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்ற முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 13) எஸ்பி முத்தரசி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கருதப்படுகின்றது.
சிவகங்கை குழந்தை தொழிலாளர்களை ஒழித்த வகையில் மாநில அளவில் சிவகங்கை முதலிடத்திற்கான விருதை பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை மூலம் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து ஒழித்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரணம், இழப்பீடு பெற்றுத்தருதல், குழந்தைகள் கல்விக்கு உதவுதல் போன்ற பணிகளை செய்து வருகிறது. சிவகங்கை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கோடைசாரல் மழை காரணமாக அனைத்து அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்து வருகின்றது. கடந்த 2 தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாததினால் காரணமாக அனைத்து அருவிகளிலும் தற்பொழுது சற்றுநீர் வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் காலை முதல் குற்றாலம் அருவியில் ஆண்கள் கூட்டம் காணப்படுகிறது. பெண்கள் கூட்டமும் குறைந்தது
மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு திருச்சி வழியாக சேலம் சென்று மீண்டும் மயிலாடுதுறை வரும் ரயில் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சேலத்திலிருந்து புறப்படாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு கரூரில் புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,கரைவெட்டி அடுத்த எசனை கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன். இவர் இன்று தனது மனைவி தங்க புஷ்பத்துடன் இருசக்கர வாகனத்தில் எசனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமராஜன் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம், வரும் 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக, அனைத்து துறை அலுவலர்கள், அரசு அலுவலகங்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், பாலுார், காட்டாங்கொளத்துார் பகுதி மக்கள், அனைத்து துறை சார்ந்த மனுக்களையும் இன்று முதல் வழங்கலாம்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து நாகை எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், நாகை நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும். நாகை ECR சாலை புறநகர் பேருந்து நிலையம் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். நாகூர் சில்லடி கடற்கரை மேம்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில்சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு இயந்திரவியல், தானியங்கியல் ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.com ல் ஜூலை.8க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து, நேற்று ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.45 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து கடுமையாக குறைந்து விட்டதால், ஒரு கிலோவுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு:
அதிகபட்சமாக ஆவடியில் 6 செமீ, கும்மிடிப்பூண்டி 1.8 செமீ, பொன்னேரி 1 செமீ, செங்குன்றம் தலா 2.8 செமீ, சோழவரம் 3.5 செமீ, திருத்தணி 1.7 செமீ, பூண்டி 2.1 செமீ, செம்பரம்பாக்கம் 8.2 மிமீ, திருவள்ளூர் 3.2 செமீ, ஜமீன் கொரட்டூர் 7 மிமீ, பூவிருந்தவல்லி 7 மிமீ, பள்ளிப்பட்டு 5 மிமீ, மழை அளவு பதிவானது. சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில்
18.81 மிமீ மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.