India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடைபெற, உள்ள சிவில் சர்வீசஸ் எக்ஸாமினேஷன்ஸ் வரும் ஜூன்.14ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. மேற்படி, திருச்சியில் 12 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை மொத்தம் 4705 தேர்வுகள் எழுத உள்ளனர். மேலும் 12 தேர்வு கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்ஆர். எம் ஹோட்டல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ‘ஹோட்டலை அரசு கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என வழக்கு தொடரப்பட்டது. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ‘ஜூன்.18ஆம் தேதி செவரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது’ என உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அடுத்து பாஜக ஐஜேகே கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடம் சோதனை செய்யும் போது ரூ.16,75,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்ரீரங்கம் தொகுதி அந்த நல்லூர், போதாவூர் ஊராட்சி செவக்காடு அதிமுக கிளை செயலாளர், ஆறுமுகம் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியானதாகவும், அவரது குடும்பத்தாற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 21 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், நாற்று நடும் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம்,டிப்பர், வைக்கோல் சுற்றும் இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க வைக்கப்பட்டுள்ளன. மேலும், இயந்திரங்களை விவசாயிகள் முன்பதிவு செய்து குறைந்த வாடகைக்கு பெற்று உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய பொருட்கள் நிறுவனம் காதி கிராம தொழில் வாரியம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தேவர் ஹாலில் 10 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94437284 38 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தலைமை பயிற்சியாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
துறையூர் வட்டம் கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றது. இதையடுத்து, இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமியிடம் வழங்கினார். இதில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, எம்பி கலாநிதி மாறன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்திய இராணுவத்தால் அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்விற்கு 08.7.2024 முதல் 28.7.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள காஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து ஜூலை 2024 முதல் மார்ச் 2025 வரை 9 மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஜூன்.19,20,21 ஆகிய 3 தினங்களுக்கு ஆட்சியர் அலுவலக பின்புறம் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.