Tamilnadu

News June 15, 2024

கிருஷ்ணகிரி: மாணவனுக்கு பாலியல் தொல்லை

image

ஊத்தங்கரை அடுத்தள்ள பாவக்கலை சேர்ந்தவர் பார்த்திபன் (37), டெய்லர் கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு மாற்றுத்திறனாளியான பிளஸ் 2 மாணவன் ஒருவர் தனது பழைய துணி தைக்க சென்றபோது பார்த்திபன் அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து பார்த்திபனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News June 15, 2024

திருவள்ளூர்: ரேஷன் அட்டை தாரர்களே… கலெக்டர் உத்தரவு

image

திருவள்ளூர் ஆட்சியரகத்தில் வாராந்திர பொது விநியோக திட்ட ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜூ்ந 15ஆம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் நுகர்வு செய்யப்படவும், நுகர்வு குறைவாக உள்ள ரேஷன் கடைகளை ஆய்வுசெய்து நுகர்வு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், ரேஷன் கடைகள் தொடர்பாக வரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

News June 15, 2024

தி.மலை: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

image

செய்யாறு அடுத்த தொழுப்பேடு மதுரா கொழம்பாடியில் தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்தது.  குடிசை வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு செய்யாறு எம்எல்ஏ ஜோதி நிவாரண பொருட்களை வழங்கினார்.  நிவாரண பொருள்களுடன், ரூ.5 ஆயிரம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.  இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஞானவேல், முக்கூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் திருமால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

News June 15, 2024

கள் விற்பனை தடையை நீக்க கோரி வழக்கு

image

கடந்த 1987ல் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள் விற்பனைக்கு அனுமதித்து பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மனதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுநல வழக்கு என்பதால் இரு நீதிபதிகள் கொண்ட முதன்மை அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

News June 15, 2024

தேனி: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கவியரசன். இவர் நேற்று தனது நண்பர் டிராவிட் என்பவருடன் காரில் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பழைய ஆர்டிஓ ஆபீஸ் அருகே வந்த போது நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் உருண்டது. காரில் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், தேனி மருத்துவக் கல்லூரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News June 15, 2024

ஈரோடு: யானை தாக்கி ஒருவர் பலி

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் வெங்கடாசலம் (25)  என்பவர் வழக்கம்போல தோட்டத்தில் பூசணிக்காய் பாதுகாப்பிற்காக படுத்து உறங்கினார்.  இந்நிலையில், அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென வந்த ஒற்றை யானை அவரை தாக்கி மிதித்ததில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News June 15, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

image

ராணிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே பழுதடைந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு செய்வதற்காக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி உடன் இருந்தார்.

News June 15, 2024

குவைத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு இன்று தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் அவரது குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

News June 15, 2024

களைகட்டிய ஆட்டுச் சந்தை விற்பனை

image

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை வாரம் தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது. இந்த ஆட்டுச் சந்தையில் பெரம்பலூர் சுற்றுவட்ட கிராமங்கள் மற்றும் திருச்சி, சேலம், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

News June 15, 2024

இப்பகுதியில் இன்று மின்தடை 

image

திருவையாறு 33 கிலோ வாட் துணை மின்நிலையம் (ம) மேலத்திருப்பந்துருத்தியில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் உள்ளிட்ட பகுதியில் இன்று(15.6.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

error: Content is protected !!