Tamilnadu

News March 17, 2024

நாகை கலெக்டர் அறிவிப்பு 

image

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைப்பெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நாளை முதல் (18.3.24) ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ 51.25 கோடியில் சாலைப் பணிகள்!

image

புதுக்கோட்டை அருகே நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கேப்பரை பகுதியில் ரூ 38 கோடியில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலை, திருவரங்குளத்தில் ரூ 4.48 கோடியில், வடகாடு பகுதியில் ரூ 7.77 கோடியில், புதுக்கோட்டை ஆவணம் சாலை ரூ 51.21 கோடியிலுமான ரூ 51.25 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளையும், கொத்தமங்கலம் ஊராட்சியில்
ரூ 13.50 இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

News March 17, 2024

திருமங்கலம் அருகே விபத்து

image

திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி (65). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கண்டுகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 17, 2024

சிவகாசி டி.எஸ்.பி அதிரடி மாற்றம்!

image

சிவகாசியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக டிஎஸ்பியாக பணியாற்றி வந்த தலைமையின் தற்போது பழனி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பழனியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த சுப்பையா சிவகாசியின் புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News March 17, 2024

திருச்சி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

திருச்சி பேட்டை வாய்த்தலையை சேர்ந்த
ப. பெரியசாமி (38).இவர் தனது டூவீலரில் பெருகமணி பகுதியில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்த போது அவ்வழியே வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்திலேயே இறந்தார்.இதையறிந்த பேட்டைவாய்த்தலை போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

News March 17, 2024

மயிலாடுதுறை அருகே இரண்டு பெண்கள் கைது 

image

மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி சட்டவிரோதமாக சாராயம் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 சாராயபாட்டில்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்த 2 பெண்களையும் இன்று கைது செய்தனர்

News March 17, 2024

தென்காசி:கலெக்டர்,எஸ்பி எச்சரிக்கை

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்

News March 17, 2024

கடலூர்:மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு சலுகை

image

கடலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கு சென்று கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையில் எழுத்துப்பூர்வமாக வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்குப்பதிவு செலுத்த முடியாது, எனக் கூறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

மதுரையில் உணவு திருவிழா

image

மதுரை, அவனியாபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் சைனீஸ் உணவுத் திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உணவு திருவிழாவில் “மடிராகன் ஃபீஸ்டா” என்ற தலைப்பில் 1000 ஆண்டுகள் பழமையான உணவுகளை இன்றும் சமைத்து அசத்தியுள்ளனர். சைனா நாட்டை சேர்ந்த பாரம்பரிய சுமார் 200 வகையான உணவுகளை சமையல் வல்லுநர்கள் சமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

News March 17, 2024

திருவாரூரில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சாருஸ்ரீ பார்வையிட்டு அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

error: Content is protected !!