India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) முடிவடைந்தது. இதுவரை அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நெசப்பாக்கம், கேகே நகர் சந்திப்பில் நேற்று(மார்ச் 27) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒரு நபர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.7 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகியமண்டபம் சந்திப்பில் இன்று(மார்ச் 28) காலை 9.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குமரி மக்களவை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், கோவிலூர் என்ற இடத்தில் நேற்று(மார்ச் 27) வைக்கோல் பாரம் ஏற்றி வந்த ஈச்சர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட பூனம் என்ற கா்ப்பிணி பெண்ணுக்கு நேற்று(மார்ச் 27) வளைகாப்பு விழா நடைபெற்றது. கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில், மருத்துவா் கே.மணிமேகலை முன்னிலையில் பூனத்துக்கு வளைகாப்பு நடைபெற்றது.
மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த 20-ம் தேதி 2 பேரும், 22-ம் தேதி ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதனையடுத்து 25-ம் தேதி அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக உள்பட 11 பேர் மனு தாக்கல் செய்தனா். 26ம் தேதி 6 பேரும், இறுதி நாளான நேற்று 13 பேரும் மனுதாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 33 ஆகவும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் 41 ஆகவும் உள்ளது.
சூலூர் தொகுதியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய எஸ்.பி.வேலுமணி வெறும் 4% ஓட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அண்ணாமலை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அரசியல் செய்து வருகிறார். களத்தில் இல்லாத அண்ணாமலை அதிமுகவுக்கு போட்டியில்லை. அதிமுகவுடன் போட்டியிட முதலில் பூத் வாரியாக ஏஜெண்டுகளை போடுங்கள் என கிண்டல் அடித்தார்.
சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியா்தாஸுக்கு ரூ.91.90 லட்சத்தில் அசையும் சொத்துகள், ரூ.5.74 கோடியில் அசையாச் சொத்துகள் உள்ளன. இவரது மனைவி மரிய திருஷ்டி ராதிகாவுக்கு ரூ.97.12 லட்சத்தில் அசையும் சொத்துகள் உள்ளன. இதில் சேவியா்தாஸின் கையிருப்பாக ரூ.25 ஆயிரம், ரூ.48.48 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம், ஓா் இரு சக்கர வாகனம், ஒரு காா் உள்ளது.
தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஏப். 1ஆம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களுள் தேர்தல் பொதுப்பார்வையாளரின் அலைபேசி எண்ணான 9363966536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையின் பயனீர் விடுதியில் தங்கி உள்ள தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார், தகவல் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.