India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று பயிற்சி வகுப்பு தொடங்கியது.இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.5 கட்டமாக நடைபெற உள்ள நீச்சல் பயிற்சி வகுப்பில் நேற்று தொடங்கிய முதல் கட்ட பயிற்சி வகுப்பில் சுமார் 50 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் நீச்சல் குள பயிற்சியாளர்கள்,காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.2°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில், மக்களவைத் தோ்தல் – 2024-ஐ முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் ச.உமா, நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளா்கள் ஏறத்தாழ 23,500 போ் உள்ளனா். அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சிவகாசி அருகே நடையனேரி தாழிகுளத்துபட்டியை சேர்ந்தவர் அய்யனார் 48. இவர் 6 பசு மாடுகள், 3 கன்று குட்டிகள் வைத்து விவசாயம் நடத்தி வருகின்றார். அய்யனார் தன் வீட்டின் அருகே மாடுகளுக்கு சமையல் கழிவுநீரை தேக்கி வைத்து அதனை நேற்று வழங்கியுள்ளார். அந்த நீரை குடிக்க இரண்டு பசு மாடுகள் திடீரென உயிரிழந்தது இதனால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். கால்நடை துறையினர் விசாரணை.
லட்சுமி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரபு. கொத்தமல்லித்தழை வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று கூடலூர் சென்று ஒரு தோட்டத்தில் கொத்தமல்லிக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு தனது டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கம்பம் பைபாஸ் ரோட்டில் வந்த போது எதிரே வந்த ஜீப் மோதியது. ஜெயபிரபு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை (ஏப்ரல் 2) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா விடுத்துள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்காளர்கள் 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்கினை செலுத்தலாம் என அறிவித்துள்ளார். அதன்படி ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 12 வகையான அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பணி மேற்கொள்வது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிகள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் கலந்து கொண்டார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (ஏப்ரல் 2) பாளை முஸ்லிம் அனாதை நிலையத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு வருகை தந்தார். அங்கு இஸ்லாமியர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பெற ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டார்.
சேலம் மாவட்டம், நெத்திமேடு ஜங்ஷன் பகுதியில் (01.04.2024) நேற்று மாலை பறக்கும் படை அதிகாரியான தலைவாசல் வேளாண் துறை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்த 7 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுக்கு தேவையான முத்து மற்றும் கொக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sorry, no posts matched your criteria.