Tamilnadu

News April 3, 2024

அரியலூர்: பூத் ஸ்லிப் வழங்கிய ஆட்சியர்

image

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகளை வழங்கினார்.

News April 3, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பி.ஆர்.பாலகிருஷ்ணன்(ஐ.டி. – ஓய்வு) தமிழகத்திற்கான சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ அல்லது பொது மக்களோ தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 93452 98218 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

மத்திய அரசை எச்சரித்த தமிழக முதல்வர்

image

இலங்கையை கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சனத்தில் பிரதமர் மோடி கச்சத்தீவை பற்றிப் பேசலாமா? நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன் என்று வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

News April 3, 2024

நெல்லை: சிசிடிவி கேமரா திருடியவர் கைது

image

திசையன்விளை அருகே உள்ள பட்டரைகட்டிவிளையைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவரது வீட்டில் பொருத்தி இருந்து சிசிடிவி கேமரா திருடுபோனது. இது குறித்து இவர் அளித்த புகாரின்படி திசையன்விளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சேர்மதுரையின் சகோதரர் மகாராஜன் (40) என்பவரை நேற்று (ஏப்ரல் 2) கைது செய்தார்.

News April 2, 2024

பழனி கிரிவீதிகளில் வாகனம் சென்றால் என்ட்ரி பதிவு

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் கிரிவீதிகளில் வாகனங்கள் உள்ளே செல்ல உயர் நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிக்கள் அமைக்கப்பட்டது. மேலும் கிரிவீதிகளில் உள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் வேறு ஏதாவது வாகனங்கள் சென்றால் வாகன எண், பதிவு செய்து என்ட்ரி செய்து வருகின்றனர்.

News April 2, 2024

தி.மலை: முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு

image

திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார் . இதனையொட்டி இன்று திருவண்ணாமலை வந்த மமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அருணை கல்வி குழுமத்தின் துணை தலைவர், குமரன், கம்பன் ஆகியோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். உடன் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News April 2, 2024

கஞ்சா குற்றவாளிகள் குறித்து புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு 

image

கோவையில் இந்த ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை மாவட்ட காவல்துறையினரால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 67 நபர்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  அவர்களிடமிருந்து சுமார் 28 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது 9498181212 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் காவல்துறை தரப்பில் இன்று தெரிவித்துள்ளனர்.

News April 2, 2024

கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களை இரண்டாம்கட்ட பயிற்சிக்காக கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; ஆட்சியர் பூங்கொடி, தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் திரு. பிரபுலிங் கவாலிகட்டி , முன்னிலையில் இன்று (02.04.2024) நடைபெற்றது.

News April 2, 2024

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறிய அமைச்சர்

image

திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியில் நீர்மோர் சாப்பிட்ட 25 பேர் வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இவர்களை
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News April 2, 2024

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 23.82 லட்சம் வாக்காளர்கள்

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 11லட்சத்து 80 ஆயிரத்து 263 ஆண்‌ வாக்காளர்களும் , 12 லட்சத்து 01 ஆயிரத்து 427 பெண் வாக்காளர்களும் , 429 இதர வாக்காளர்கள் என மொத்தம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 23,82,119 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர்.

error: Content is protected !!