India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பார்க்க வேண்டும் அவரை வெற்றி பெற செய்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் மற்றவர்களை தேர்வு செய்தால் கடலூர் வீணாகி விடும்’ என்று தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாபாக்கத்தில், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் பாண்டியன் தலைமையில் இன்று(ஏப்.3) அதிகாலை அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரில் சோதனையிட்டதில், பிரபாவதி என்பவர் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து ஆற்காடு வட்டாட்சியர் அருள் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.
கடையநல்லூர் மதீனா நகரை சேர்ந்த நைனார் முஹம்மது மகன் முஹம்மது மைதீன் (16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் நோன்பு திறந்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது,திடலில் கல் தடுக்கி விழுந்து மூக்கில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (50). தங்க நகை மொத்த வியாபாரி. இவரிடம் செல்வபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த செந்தில் முருகன் (42), ராஜி ஆகியோர் வங்கியில் ஏலம் போகும் நகைகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் விற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்.,8 ஆம் தேதி நகை வாங்குவதற்காக சுரேஷ் வழங்கிய ரூ. 31 லட்சத்தை இருவரும் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்
நாகை அடுத்த பாப்பா கோயிலில் உள்ள வீடு ஒன்றில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று மேற்கொண்ட சோதனையில் ஒரு வீட்டில் பண்டல், பண்டலாக சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பழனி என்பவரை கைது செய்து மற்றொருவரை தேடிவருகின்றனர்.
புதுவையை சேர்ந்த தேவி என்பவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடியுள்ளார். அப்போது டெலிகிராம் மூலம் மர்ம நபர்கள் லிங்க் அனுப்பி அவரிடமிருந்து ரூ.1,39,000 -த்தை ஏமாற்றியுள்ளனர். மேலும், இதே போன்று கார்த்திக் என்பவரிடம் ரூ.14,000, சந்திரசேகர் என்பவரிடம் ரூ.8,000 ஏமாற்றி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரபல மலையாள நடிகர் ரோனி டேவிட் ராஜ் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மலையாளத்தில் பிரபலமான ரோனி டேவிட் ராஜ் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 2018 மற்றும் மம்முட்டி நடித்த கன்னூர் ஸ்குவாட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே வாக்களிப்பதற்கு எந்தவொரு நபரும் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆஷா அஜித் நேற்று எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் பகுதிகளில் திமுக கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு இன்று (ஏப்ரல் 3) காலை நடைப் பயிற்சியின்போது மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.புஷ்பராஜ் பானை சின்னத்திற்கு பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாபநாசத்தில், திருமண அழைப்பிதழ் போன்று பத்திரிகை அச்சடித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.