Tamilnadu

News April 3, 2024

சித்திரைத் திருவிழா தொடக்கம்

image

குலசேகரப்பட்டினம் வடக்கூர் உள்ள அருள்மிகு வீர மனோகரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து கோவில் கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழா இம்மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

News April 3, 2024

வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து கிளை ஊராட்சிகளிலும் இன்று காலை அனைத்து கிராமங்கள் தோறும், மக்களை நேரில் சந்தித்து தான் போட்டியிடும் கதிர் அரிவாள் சின்னத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

News April 3, 2024

சிறுமியிடம் சில்மிஷம் செய்த பிளம்பர் மீது போக்சோ

image

தேவகோட்டை அருகே சீனமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 13 வயதுடைய சிறுமியிடம் வீட்டிற்கு பைப் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு பாலியல் துன்புறுத்தியதாக சிறுமியின் தாய் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் புளியங்குடி பட்டியை சேர்ந்த சுரேஷ் (24) மீது (ஏப்ரல்.02) நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 3, 2024

வாக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும் அதிமுக வலியுறுத்தல்

image

புதுச்சேரியில் அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன் புதுச்சேரியில் பட்டியலை வைத்துக்கொண்டு வீடு வீடாக ரூ.500, ரூ.1000 என்று பணம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுகிறார்கள் புதுச்சேரியில் தேர்தலில் சமநிலை இல்லை எனவே நடைபெற உள்ள வாக்கு பதிவை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என மாநில செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 3, 2024

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு

image

இன்று மதுரை மேலூர் அருகே உள்ள கிராமங்களில், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன். ஊர்மக்கள் உற்சாகமாக மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.

News April 3, 2024

புகலூர் அருகே மருத்துவ பரிசோதனை முகாம்

image

புகலூர் அருகே நொய்யல் பகுதியில் காய்ச்சல் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

News April 3, 2024

மத்திய உள்துறை அமைச்சர் சிவகங்கை வருகை

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற 5 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதனையொட்டி நேற்று காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் வேட்பாளர் தேவநாதன் யாதவ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News April 3, 2024

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறங்கிய பட்டியல்

image

நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அச்சடிக்கப்பட்ட பட்டியல் இன்று (ஏப்ரல் 3) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது. இதனை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மிகுந்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகத்தில் இறக்கிவைத்தனர்.

News April 3, 2024

போதை உதயநிதி என அழைப்போம்: அண்ணாமலை

image

கோவை பாஜக மக்களவை வேட்பாளர் அண்ணாமலை தெப்பக்குளம் மைதானத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது. தந்தை பெயர், தாத்தா பெயர் வைத்துக் கொண்டு கொச்சையாக பேசும் உதயநிதிக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். அவரை போதை உதயநிதி என நாளை முதல் கூப்பிடுகிறோம் என்றார்.

News April 3, 2024

சித்திரை திருவிழா-ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

image

மதுரை சித்திரைத் திரு விழாவையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் போது  உயரழுத்த மோட்டார் பொருத்திய பம்பை பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், பாரம்பரிய ஆட்டு தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட கை பம்புகளை பயன்படுத்த உத்தரவிட்டது. தல்லாகுளம் நாகராஜன் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!