Tamilnadu

News April 11, 2024

காவல் துறையினா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

image

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறை, வேலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் பரமத்தி வேலூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தொடங்கி வைத்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.

News April 11, 2024

விழுப்புரம்: மது கடத்திய இருவர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

image

கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் விழுப்புரம் மதுவிலக்குப் போலீசாரின் வாகன தணிக்கையின்போது புதுச்சேரியிலிருந்து மது கடத்திவந்த கதிரவன், சூரியா ஆகியோரை கைது செய்தனர். அவர்களை நேற்று தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். போலீசார் அவர்களை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News April 11, 2024

விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

image

மணலி விரைவு சாலையில் தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ட் லிமிடெட் (டி.பி.எல்) என்ற கெமிக்கல் தொழிற்சாலை இயங்கிவருகிறது. நேற்று முன்தினம் கூலி தொழிலாளர்கள் இருவர் இங்குள்ள டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 11, 2024

இரு நாட்கள் அரசியல் விளம்பரங்கள் செய்ய தடை

image

வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்.18 மற்றும் வாக்குப் பதிவு நாளான ஏப்.19 ஆகிய இரு நாட்களில் அரசியல் கட்சிகளோ , வேட்பாளா்களோ , அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ, மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியின்றி தோ்தல் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

சென்னையில் போக்குவரத்து மாற்றம் 

image

சென்னை குடிநீர் வடிகால் வாரியம், ஈவிகே சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில் சாக்கடை வடிகால் பணியை மேற்கொள்ள இருப்பதால் நேற்று முதல் வரும் 13ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஈவிகே. சம்பத் சாலையில் உள்ள ஹண்டர்ஸ் சாலை நாராயணகுரு சாலை சந்திப்பிலிருந்து ஈவிகே சம்பத் சாலை- ஜெர்மியா சாலை சந்திப்பு வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

News April 11, 2024

வேலூர்: மணல் கடத்திய 2 பேர் கைது

image

குடியாத்தம் அம்மணாங்குப்பம் ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக நேற்று (ஏப்ரல் 10) குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்திய வழக்கில் மணிவண்ணன் (51),  பிரபு (32) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News April 11, 2024

டீசல் எஞ்சினில் மலை ரயில் வெள்ளோட்டம்

image

திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில், குன்னூர் மலை ரயிலின் ‘டீசல் எஞ்ஜின்’ புதுப்பிக்கப்பட்டது. நேற்று (ஏப்.10) அது மலை ரயிலில் பொருத்தப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. இன்னும் ஒரு வார காலத்தில், பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

News April 11, 2024

கார் பள்ளத்தில் கவிழ்ந்து டாக்டர் பலி

image

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முகிலன் நேற்று திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு விலக்கு பகுதியில் தனது காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த இரும்பு மின் கம்பியில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 11, 2024

தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் நேற்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், “ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போன்று இன்று (ஏப்.,11) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். எனவே, முன்பதிவு செய்யும் பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

திருப்பூர்: வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் ஆகிய 3 சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள் கடந்த 8ஆம் தேதி கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று 2வது நாளாக 3 சங்கத்தினரும் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!