Tamilnadu

News April 15, 2024

திருநெல்வேலியில் 103.60 மில்லி மீட்டர் மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஏப்.15) காலை வரை மொத்தமாக 103.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News April 15, 2024

தீ தொண்டு வாரத்தையொட்டி தீ தடுப்பு விழிப்புணர்வு

image

மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மதுராந்தகம் தீ மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் திருமலை தலைமையில் தீ தடுப்பு குறித்து மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பணியாற்றும் ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உதவி அலுவலர் சீனிவாசன் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

News April 15, 2024

வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

image

பள்ளிபாளையம், சங்ககிரி சாலையில் வெடியரசம்பாளையம் என்ற பகுதியில், நேற்று இரவு தனியார் பேருந்து மோதி வட மாநில இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

News April 15, 2024

குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் அவதி

image

விருத்தாசலம் நீதிமன்ற வளாகம் எதிரில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குரங்குகள் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி செல்வதோடு சாலையில் செல்லும் பொதுமக்களை சில நேரங்களில் கடிக்க பாய்கின்றன.எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 15, 2024

சிறுத்தை இடம் பெயர்ந்திருக்கக்கூடும்

image

அரியலூரில் சுற்றிய சிறுத்தை கடலூர் அல்லது பெரம்பலூருக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நின்னியூரில் சிறுத்தை கால்தடம் பதிவாகி இருந்த நிலையில்அதை பிடிக்க 3 கூண்டுகள் வைக்கப்பட்டன. 3 இடங்களில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்காத நிலையில் வேறு பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பெரம்பலூர், கடலூர் ஆற்றுப்படுகைகளில் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 15, 2024

தஞ்சை பெரிய கோயிலில் தேர் சுத்தம் செய்யும் பணி

image

தஞ்சை பெரிய கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சித்திரை திருவிழா  தேரோட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பெரிய கோவில் தேரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புகழ்பெற்ற இந்த தேர் திருவிழாவை எண்ணி பக்தர்கள் காத்துக்கிட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

News April 15, 2024

 மதுரைக்கு உள்ளுர் விடுமுறை

image

மதுரை மாநகரில் 23.04.2024
(செவ்வாய்க்கிழமை) அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளவிருப்பதால் , அன்றைய தினம் மதுரை
மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக மே.11 ஆம் தேதி (11.05.2024 சனிக்கிழமை) வேலை தினமாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறவித்துள்ளார்.

News April 15, 2024

அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 15, 2024

சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் முடக்கம்

image

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் அப் சேட்போட் (WhatsApp chatbot) மூலம் டிக்கெட் பெறும் வசதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று தற்காலிகமாக முடங்கியுள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், CMRL பயண அட்டை, மொபைல் செயலி, யுபிஐ செயலிகள், சிங்கார சென்னை கார்டு போன்ற பிற சேவைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

News April 15, 2024

4314 பேர் தபால் வாக்கு பதிவு

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2843 பேர் மற்றும் ராணுவத்தில் உள்ள 3 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடந்த 2 ஆம் கட்ட பயிற்சியின் போது 1468 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மக்களவை தொகுதியில் மட்டும் இதுவரை 4314 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!