India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருத்தாசலம் முல்லா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி பஞ்சவர்ணம் (40). இவரது மகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்த பஞ்சவர்ணம் நேற்று மாலை தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, தலைமையில் மக்களவைத் பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் தபால் வாக்குகளை ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் முழு பாதுகாப்புடன் திருச்சி மாநகராட்சி கலையரங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து வடசேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. வெட்டூர்ணிமடம் பகுதியில் அந் பேருந்து வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே இருந்த மையத்தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன்
கூட்டணி வைத்து என்ன பயன் ? என்று இன்று சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மறுமலர்ச்சி திமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான, இன்று மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேரில் சந்தித்து தேர்தல் பரப்புரை பயணம் தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் அவரிடம் வாழ்த்து பெற்று கொண்டார். இந்நிகழ்வில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் சித்திரா பௌர்ணமியின் போது அன்னதானம் வழங்க இன்று (17.04.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் அன்னதானம் வழங்க விரும்புவோர் மேலும் விவரங்களுக்கு 9047749266, 9865689883 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சேலத்தை அடுத்துள்ள வீராணம் டி.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (34). இவர், அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையை பூட்டும் நேரத்தில் இளைஞர் ஒருவர், குடிபோதையில் வந்து தனக்கு முடி வெட்ட வேண்டும் என கதிர்வேலுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து
நட்ராஜ் (23) என்ற வாலிபரை கைது செய்தனர்.
இஸ்ரேல் நாட்டை சோ்ந்த சரக்கு கப்பலை ஈரான் புரட்சிப் படையினா் கடந்த சனிக்கிழமை சிறைபிடித்தனா். இதில் 17 இந்தியா்கள் உள்பட 25 போ் சிக்கியுள்ளனா். இவா்களில் திருவாரூர், மன்னாா்குடி வ.உ.சி. சாலை ரேவதி நகரை சோ்ந்த குணசேகரன்- புனிதா தம்பதியரின் மகன் மரைன் பொறியாளரான தேவதா்ஷன் (21) என்பவரும் ஒருவா். இந்நிலையில் இவரை மீட்க அவரது பெற்றோர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி, தவளக்குப்பத்தை சேர்ந்தவர் மருத்துவர் வினோதினி. இவர் கடந்த 4 ஆண்டுகளாக குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் வினோதினி தேசிய அளவில் 64-ஆவது இடத்தையும் புதுச்சேரியில் முதல் இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை சந்திரன் புதுச்சேரி காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குளித்தலை, வடவம்பாடி ஊராட்சி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேகர்(29), லாரி டிரைவர். இவரது தங்கை விண்மணி(22). கரூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வழக்கம் போல் காலை, 8:00 மணிக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேகர் கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.