Tamilnadu

News April 17, 2024

முன்னாள் முதல்வர் பிரசார ஊர்வலம் நிறைவு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ராமநாதபுரம் நகரில் இன்று மதியம் பிரசார வாகனத்தில் ஊர்வலம் சென்று வாக்கு சேகரித்தார். அரண்மனை பகுதியில் துவங்கி வழிவிடும் முருகன் கோவில், வண்டிக்காரத்தெரு , சிவன் கோயில் பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

News April 17, 2024

தி.மலை: அமைச்சர் தீவிர வாக்குச் சேகரிப்பு

image

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இன்று(ஏப்.17), தி.மலை நகரின் முக்கிய வீதிகளில் வாகனம் மூலம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுகவினர் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை, மாலை மற்றும் வெற்றிவேல் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News April 17, 2024

ஜோலார்பேட்டை: வனச்சரக அலுவலர் முகாம்

image

ஜோலார்பேட்டை பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில், மச்சக்கண் வட்டம் பகுதியில் மோகன் என்பவர் வீட்டின் அருகே நேற்று(ஏப்.16) இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் சோலை ராஜன் தலைமையில், வனத்துறையினர் இன்று(ஏப்.17) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடி நடமாட்டம் குறித்து முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News April 17, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் 

image

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 17, 2024

கடலூரில் 4 நாட்களுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 முதல் வரும் 19ஆம் தேதி இரவு 12 வரை மூடப்படும். மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

திண்டுக்கல்: கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 17.04.2024 மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி தலைமையில் கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி மத்திய தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலி கட்டி முன்னிலையில் நடைபெற்றது.

News April 17, 2024

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

image

நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 17, 2024

காஞ்சியில் வாக்குப்பெட்டி கொண்டு செல்ல வாகனங்கள் தயார்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று  ஆட்சியர் வளாகத்துக்குள் தேர்தல் போலீஸ் ரோந்து பணிக்கு மற்றும் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்ல வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் வாகனங்களுடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்க காவல்துறை தயாரான நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

News April 17, 2024

விழுப்புரத்தில் அரசு அருங்காட்சியகம்‌

image

மக்களின்‌ நீண்ட கால கோரிக்கையான தொல்லியல்‌ ஆராய்ச்சி மையம்‌ மற்றும்‌ அருங்காட்சியகம்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை அறிவித்த பிறகும்‌ தற்போது வரை அதற்கான எந்த முன்னெடுப்புகளும்‌ எடுக்காமல்‌ உள்ளது. அதை விரைவுபடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்‌ நிதியிலிருந்து விரைவாக கட்டிடம்‌ கட்டிக்‌ தரப்படும்‌ என விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் முரளி சங்கர் என வாக்குறுதி அளித்துள்ளார்.

News April 17, 2024

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

image

மன்னார்குடி பகுதியில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒவ்வொருவரும் இந்தியா கூட்டணிக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!