India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 மக்களவைத் தேர்தலில், விருநகர் தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 4,70,883 (43.8%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான உமையொருபாகம் 789 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
2019 மக்களவைத் தேர்தலில், தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தனுஷ் குமார் வெற்றிபெற்று எம்பியானார். இவர், மொத்தம் 4,76,156 (44.7%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான தங்கராஜ் என்பவர் 727 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.
தூத்துக்குடி பென்னாகரத்தை சேர்ந்தவர் பெவின் (20). நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்து மோதியதில் காயமடைந்தார். மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த பெவின் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்காக மதுரை மாவட்டத்தில் 2,751 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 359 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இம்மையங்களில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு, தேர்தல் நுண் பார்வையாளர்கள், வெப் காஸ்டிங் முறை ஆகியவை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
ஈரோடு, தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் இன்று காலை ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நோக்கி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்ரல் 18) நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் நவீன துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை கோட்டத்தில் 316.65 கிமீ தூர திருச்சி முதல் நெல்லை வரை உள்ள ரயில் நிலையங்களில் விபத்தை தடுப்பதற்காக ‘கவச்’ என்ற பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாகச் சென்றால் 5 நொடிகள் எச்சரிக்கை மணி ஒலி எழுப்புகிறது. அதற்குப் பிறகும் வேகம் குறையவில்லை என்றால் தானாக பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்த செய்கிறது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுகவை சேர்ந்த ஏகேபி சின்ராஜ் வெற்றிபெற்றார். இவர், மொத்தம் 55.24% வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவை சேர்ந்த காளியப்பன் 31.85 % வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பெற்றார். கடைசி இடத்தில் சுயேச்சை வேட்பாளர் சிவராஜி இருக்கிறார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 341. நாளை ஜனநாயக கடைமை ஆற்ற தவறாதீர்!
கோடை வெயிலை சமாளிக்க, இன்று காலை வயலூர் ரோடு, பிஷப்ஹீபர் கல்லூரி சாலை, சீனிவாசா நகர், பகுதிகளில், நொங்கு ,மற்றும் நொங்கு தண்ணீர் , விற்பனை சூடு பிடித்துள்ளது, 10 ரூபாய்க்கு,2, 20 ரூபாய்க்கு, 5என்று விற்றாலும், ஆரோக்கியமான குளிர்ச்சி தரும், பொருள் என்பதால், மக்கள் விருப்பமுடன் வாங்கிச் செல்கின்றனர். காலையி 9 மணிக்கு கொண்டுவரும் நொங்கு, மதியம் 2மணிக்குள் விற்று விடுகிறது.
Sorry, no posts matched your criteria.