India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேராவூரணியில் சமூக ஆர்வலரான தக்ஷிணாமூர்த்தி 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென தனது ஆள்காட்டி விரலை பின்புறமாக மடக்கி உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன அதிகாரி நாகராஜன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 82 வினாடிகளிலேயே 100 தடவை ஆள்காட்டி விரலை மடக்கி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
சிவகாசியில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வரிசைகள் காத்திருந்த இளைஞர் ஒருவர் ஐபிஎல் குறித்த பதாகையை கையில் ஏந்தியபடி வந்திருந்தார். அதில் தான் ஒரு சிஎஸ்கே ரசிகன் எனவும் ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை விராட் கோலி சார்ந்துள்ள பெங்களுர் அணி வெல்லும் என கன்னட வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதிய பதாகையுடன் வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரியில் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது மக்களிடையே பேசுகையில், ‘சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கும் பாமக, சமூகநீதி பேசும் பாமக, அவற்றிற்கு நேரெதிரான பாஜகவுடன் கூட்டு சேர்ந்த மர்மம் என்ன?’ என கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சி, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவிற்காக குளித்தலை ஒன்றியத்தில் உள்ள கோட்டைமேடு, குட்டப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தொகுதி பொறுப்பாளர்கள் எம்பி அப்துல்லா பரணிதரன், நன்னியூர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் மேலும் மருதூர், வடபாதி, பிச்சங்கொட்டகம், கட்டிமேடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்று (8.4.2024) அதிமுக நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கருக்கு, அதிமுக மாவட்ட செயலாளர், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காமராஜர் கூட்டணி கட்சித் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தருமபுரி மக்களவைத் போட்டியிடும் அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து தருமபுரி குமாரசாமி பேட்டை அருகில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம் என சீமான் உறுதி அளித்தார்.
குமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டு கொடுத்து ஓட்டு பெற்று வருகின்றனர். அதன்படி, மாவடத்தில் 2,546 மாற்றுத்திறனாளிகளும், முதியோர் 3,982 பேரும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்காக, பாதயாத்திரை நேர்த்திக்கடன் செலுத்த பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, திருப்பதி செல்கிறார் சே.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன். ஏழுமலையானிடம் வேண்டி குழந்தைப் பேறு கிடைத்ததால், பிரார்த்தனையை நிறைவேற்ற பாத யாத்திரை செல்வதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராய நகா், காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று(ஏப்.8) பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 144 தடை சட்டத்தின் கீழ் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்டமனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டியை சார்ந்த மலைவாழ் பழங்குடியின பெண் (42) மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அறுவை சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டது. தகவலறிந்த ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மற்றும் தன்னார்வலர்கள் 4 யூனிட் ரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்து உதவினார்.
Sorry, no posts matched your criteria.