Tamilnadu

News April 8, 2024

அரசு பஸ்களில் சமரச மைய விழிப்புணர் ஸ்டிக்கர்

image

சமரச மையங்கள் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் நீதிமன்ற நிலுவை வழக்கு பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (ஏப்ரல் 8) முதல் 12ம் தேதி வரை சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஸ்டிக்கரை அரசு பஸ்ஸில் மட்டும் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா இன்று தொடங்கி வைத்தார். நீதிபதிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

News April 8, 2024

அவலாஞ்சி அணை வறண்டு போகும் அபாயம்

image

 உதகையில் இருந்து 35 கிமீ தொலைவில் அவலாஞ்சி அணை உள்ளது . இந்த அணை நீர்  மின்சாரம் உற்பத்திக்கு உதவியாக உள்ளது.  இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. அதனால் அணையில் குறைந்த அளவு நீர் மட்டம் இருந்தது. அதன் பிறகு 6 மாதங்களாக மழை இல்லை. சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துகிறது. அணைக்கு ஊற்று நீர் வரத்து  இல்லை.  இதனால் அணை வறண்டு போகும் அபாய கட்டத்தில் உள்ளது.

News April 8, 2024

அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

image

ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு ஆதரித்து முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மற்றும் மாவட்ட, ஒன்றிய ,நகர, பேரூர் கழக செயலாளர்கள் கிளை கழக பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

News April 8, 2024

பா.ம.க வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கப்பியாம்புலியூர், வா.பகண்டை, அய்யூர் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பா. ம. க வேட்பாளர் முரளி சங்கருக்கு ஆதரவாக பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். இதில் பா.ம.க நிர்வாகிகள் வேட்பாளருக்கு மாலை , சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News April 8, 2024

வேலூர்: வீட்டில் இருந்து 7 லட்சம் பறிமுதல்

image

காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் நடராஜன் வீட்டில் தேர்தலுக்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்றிரவு (ஏப்ரல் 7) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் சந்தோஷ் தலைமையிலான பறக்கும் படையினர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

News April 8, 2024

தேர்தல் விதிமீறல் 60 வழக்குகள்: எஸ்.பி.சந்தீஷ்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதன்படி இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி. சந்தீஷ் தெரிவித்தார்

News April 8, 2024

தேனி: கையெழுத்து இயக்கம் தொடக்கம்

image

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியராக அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

News April 8, 2024

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

image

தாம்பரத்தில் மெப்ஸ் (MEPZ) என்ற ஐடி வளாகம் உள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரால் திருநீர்மலை ஏரி, சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வீடுகளில் குடிநீர் குழாயில் நுரையுடன் தண்ணீர் வருகிறது. இதுகுறித்து தாமாக வழக்கு பதிந்த தீர்ப்பாயம் ஜூன் 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

News April 8, 2024

திருச்சி: மாணவிகளுக்கு அவசியம்

image

திருச்சி ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. தேசியக் கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். விழாவில் தென்னக ரயில்வே வணிக மேலாளர் மோகனப்பிரியா, மாணவ மாணவிகளுக்கு பன்முகத்திறமை, வளர்ச்சி மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க உதவுகிறது என்று கூறினார். குழந்தைகளிடம் பாலின கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

News April 8, 2024

40 லிட்டர் சாராயம் பறிமுதல்: போலீஸ் விசாரணை

image

திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் நேற்று கலிதீர்த்தாள்குப்பம் திருபுவனை சாலையில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கேன்களில் 40 லிட்டர் சாராயம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனை செய்ய சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!