India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) தஞ்சாவூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார். அப்போது, கடந்த தேர்தலில் 303 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தோம். இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றார்.
திமுக, காங்கிரஸ் குடும்பத்திற்காக உழைக்கிறது. பாஜக நாட்டிற்காக உழைக்கிறது .ராணுவ தளவாடங்களை நாமே தயாரித்து பயன்படுத்தி வருவதாக கூறினார்.
தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஏப்.10ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தினை திமுக நிர்வாகி அன்பகம் பார்வையிட்டார். பின்பு பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் முன்னாள் மின்துறை அமைச்சரும், தற்போதைய திமுக வடசென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளர் கலாநிதி வீரசாமியின் தந்தையுமான ஆற்காடு வீராசாமி தனது ஓட்டு பதிவை தபால் வாக்கு மூலமாக செலுத்தினார்.தேர்தல் அதிகாரிகள் ஆற்காடு வீராசாமியிடம் அவருடைய வாக்கை சேகரித்தனர்.இதனை வடசென்னை மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலூர் கோட்டை மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 10ம் தேதி வருகிறார். இதையொட்டி கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணியை இன்று (ஏப்ரல் 8) வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், பாஜக மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நாகை, வடவூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா மற்றும் பணி நிறைசெய்யும் ஆசிரியருக்கு பாராட்டுவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமை ஏற்க வட்டாரக்கல்வி அலுவலர் க.இளங்கோவன் நீலமேகம் முன்னிலை வகித்தார். இதில் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டது.
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (8.04.2024) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேங்காய் நாரினைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு விழிப்புணர்வு சின்னத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டையில் இருந்து சின்ன குமாரபாளையம் செல்லும் சாலை வழியை ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில் ஆபத்தான வளைவான இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் தடுப்புச் சுவர் மற்றும் இரவில் ஒளிரும் பட்டை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்து உள்ளனர் .
Sorry, no posts matched your criteria.