India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகுடீஸ்வரனை தேடி வருகின்றனர். உடனடியாக மகுடீஸ்வரன் பொறுப்பிலிருந்து இருந்து நீக்கி மாவட்ட தலைவர் கனகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க மாநில தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி இன்று புளியரை காவல் சோதனை சாவடி அருகில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வள கனரக லாரிகளின் அணி வகுப்பை பார்வையிட்டார். அப்போது, அவருடன் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். கிருஷ்ணசாமியை இயற்கை வள பாதுகாப்பு சங்க செயலர் ஜமீன் சந்தித்தார்.
தாளவாடி அருகே பாரதிபுரம் கிராமத்தில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இன்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவரில் நீர் கசிந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் – கிழக்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் இந்த பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பக்கவாட்டு சுவரில் இருந்து நீர் கசிந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் பணம் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டமானது ஆறு மற்றும் ஓடை ஓரங்களில் குறிப்பாக மஞ்சளாறு , மகிமலையாறு , பழைய காவேரி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோமல், காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தையை நேரில் பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் சிறுத்தையின் அடையாளம் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தல்குடியை சேர்ந்தவர் பீட்டர் ஆரோக்கியசாமி. இந்நிலையில் பீட்டர் ஆரோக்கியசாமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றபோது, திடீரென அவரது வீட்டில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத் துறை விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டிலிருந்த மின் சாதன பொருட்கள் ஆவணங்கள் எரிந்து நாசம் ஆகியது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் கீழக்கரையில் இன்று நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். இதில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மீனவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இன்று (ஏப்ரல் 8) வேட்பாளரின் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.